அந்த விடயத்தை போட்டுடைத்த நடிகை

Spread the love

அந்த விடயத்தை போட்டுடைத்த நடிகை

தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த மீனா, அஜித்துடன் வில்லன் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.வில்லன் பட அனுபவத்தை கூறிய மீனா

அஜித்துடன் ஆனந்த பூங்காற்றே, வில்லன் ஆகிய படங்களில் மீனா நடித்தார். இதில் வில்லன் படத்தில் அவர் 2 வது கதாநாயகியாக

நடித்தார். இந்த படம் சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இதை பார்த்ததும் மீனாவுக்கு வில்லன் படத்தின்

      படப்பிடிப்பு சமயத்தில் நடந்த விஷயங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

      அஜித்துடன் வில்லன் படத்தில் மீனாஅந்த படத்தில் இடம்பெற்ற அடிச்சா நெத்தி அடியா அடிப்பேன்

      பாடலுக்கு நடனமாடிவிட்டு, மறுநாள் படுக்கையில் இருந்து எழக்கூட முடியாமல் போய்விட்டதாக மீனா தெரிவித்துள்ளார்.

      மேலும் “ஒரே மனம் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இந்த பாடல் படப்பிடிப்பின் போது திடீரென பனிமழை

          பொழிய தொடங்கிவிட்டது. எதிர்பாராமல் இது நிகழ்ந்தது. நான் அந்த குளிரை தாங்கும்படியான ஆடை அணியவில்லை. காலில்

          ஷூ கூட அணியவில்லை. பனியில் உறைந்து போய்விடுவேனோ என பயந்துவிட்டேன். இந்த பாடலுக்கு நாங்கள் ரிகர்சல் எதுவும்

          செய்யவில்லை. அப்படியே நடித்து படமாக்கினோம்”, என வில்லன் படம் குறித்த தனது அனுபவத்தை மீனா பகிர்ந்துள்ளார்.

          அந்த விடயத்தை போட்டுடைத்த நடிகை
          அந்த விடயத்தை போட்டுடைத்த நடிகை

              Leave a Reply

              Your email address will not be published. Required fields are marked *