Posted in சினிமா

கணவருடன் லிப்-கிஸ்… வைரலாகும் நடிகை

கணவருடன் லிப்-கிஸ்… வைரலாகும் நடிகை

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

கணவருடன் லிப்-கிஸ்… வைரலாகும் நடிகையின் புகைப்படம்
கணவருடன் ஸ்ரேயா


தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி,

விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரௌத்ரம் உட்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. இந்தி,

தெலுங்கு, மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய

தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்ரேயா.

அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும்

வீடியோக்களை ஸ்ரேயா வெளியிட்டு வருவார். இந்நிலையில், கணவருடன் லிப்-கிஸ் அடித்தபடி

இருக்கும் புகைப்படத்தை ஸ்ரேயா பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகிறார்கள்.

    Posted in சினிமா

    குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆகுது – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ரேயா

    குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆகுது – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ரேயா

    தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயா, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆகுது – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ரேயா
    கணவருடன் ஸ்ரேயா
    தெலுங்கு படஉலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன்பிறகு மழை, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்தார்.

    ரஜினிகாந்த்துடன் சிவாஜி படத்தில் ஜோடியாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி, சிக்குபுக்கு, ரவுத்திரம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் சில இந்தி, ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார்.

    கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்ரேயா. திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இருப்பினும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்தார்.

    வழக்கமாக கணவருடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்களை பதிவிட்டு வந்த ஸ்ரேயா தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் தனக்கு குழந்தை பிறந்து ஓராண்டு ஆனதாக அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் தனக்கு குழந்தை பிறந்ததாக ஸ்ரேயா கூறியுள்ளார். அவர் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த புகைப்படமும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து ஸ்ரேயாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    Posted in சினிமா

    ஸ்ரேயா பந்தா இல்லாத நடிகை – இயக்குனர் புகழாரம்

    ஸ்ரேயா பந்தா இல்லாத நடிகை – இயக்குனர் புகழாரம்

    மதுர, அரசாங்கம், மோகினி, மிரட்டல் ஆகிய படங்களை இயக்கிய மாதேஷ், இப்போது ‘சண்டக்காரி’

    படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த படத்தில், ஸ்ரேயா

    கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகர் விமல் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் தேவ் கில் வில்லனாக நடித்துள்ளார்.

    இந்நிலையில், ‘சண்டக்காரி’ படத்தில் நடிகை ஸ்ரேயாவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து இயக்குனர் மாதேஷ் கூறியதாவது: “மும்பை கதாநாயகிகள் என்றாலே பந்தா பண்ணுவார்கள்.

    தாமதமாக வருவார்கள். பாதுகாப்பு படையுடன் வருவார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டு

    இருக்கிறேன். என் கதைக்கு ஸ்ரேயா பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்ய சென்றேன்.

    உள்ளுக்குள் பயம் இருந்தது. ஆனால் நான் பயப்பட்ட மாதிரி ஸ்ரேயா இல்லை. பந்தாவும் இல்லை. பாதுகாப்பு படையும் கேட்கவில்லை.

    சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து விடுவார். எந்த தொல்லையும் கிடையாது. அவருக்கு

    படப்பிடிப்பு முடிந்து விட்டாலும், ‘செட்’டை விட்டுப்போகமாட்டார். மற்ற நடிகர்கள் நடிப்பதை பார்த்துக்கொண்டிருப்பார்’’ என்றார் மாதேஷ்.