Tag: ஸ்ருதிஹாசன்
அந்த நடிகருக்கு ஜோடியான ஸ்ருதிஹாசன்
அந்த நடிகருக்கு ஜோடியான ஸ்ருதிஹாசன்
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஸ்ருதிஹாசன் அடுத்ததாக வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
வயதான நடிகருக்கு ஜோடியான ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்
பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக ‘லாபம்’ திரைப்படம் வெளியானது. தற்போது பிரபாஸுடன் இணைந்து சலார் படத்தில் ஸ்ருதிஹாசன்
நடித்துள்ளார். இப்படத்தை அடுத்து பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
கோபிசந்த் மாலினேனி இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று
வருகிறது. தற்போது இந்தப் படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன் – பாலகிருஷ்ணா
முன்னதாக, கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் வெளியான ‘க்ராக்’ படத்தின் நாயகியாகவும் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காதலருடன் தீபாவளி கொண்டாடிய ஸ்ருதிஹாசன்.
காதலருடன் தீபாவளி கொண்டாடிய ஸ்ருதிஹாசன்.
லாபம் படத்தை தொடர்ந்து சலார் படத்தில் நடித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன், தனது காதலருடன் சேர்ந்து தீபாவளி பண்டிகை கொண்டாடி இருக்கிறார்.
காதலருடன் தீபாவளி கொண்டாடிய ஸ்ருதிஹாசன்.. வைரலாகும் புகைப்படம்
ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக ’ஏழாம் அறிவு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து 3, பூஜை, புலி, வேதாளம் ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் விஜய்
சேதுபதியுடன் நடித்த ‘லாபம்’ திரைப்படம் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓட வில்லை. தற்போது சலார் படத்தில் நடித்து வருகிறார்.
ஸ்ருதிஹாசன்
ஸ்ருதி ஹாசன் தற்போது மும்பையை சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் ஒன்றாக மும்பையில் வாழ்ந்து வருகின்றனர். தனது காதலருடன்
ஜோடியாக தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமோசா மாதிரி இருக்கிறார்… ஸ்ருதிஹாசனின் கிண்டல்.
சமோசா மாதிரி இருக்கிறார்… ஸ்ருதிஹாசனின் கிண்டல்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் புதிய
வீடியோ ஒன்றை பதிவு செய்து இருக்கிறார்.ஸ்ருதி ஹாசன்நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்
. இவர் சமீபகாலமாக அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகாவுடன் நெருங்கிய பழகி வருகிறார். அவரை ஸ்ருதிஹாசன் காதலிப்பதாகவும் கூறப்படுகிறது.
அவ்வப்போது காதலனுடன் ஸ்ருதிஹாசன் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், தற்போது காதலனுடன் உடற்பயிற்சி செய்யும்
வீடியோவை பதிவு செய்திருக்கிறார். அதில் அவர் உடற்பயிற்சி செய்யும் போது சமோசா மாதிரி இருக்கிறார் என்று கிண்டல் செய்கிறார். இந்த வீடியோவிற்கு லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்து வருகிறது.






