Tag: ஷிவானி
விக்ரம் படத்தில் நடிப்பதை உறுதி செய்த ஷிவானி
விக்ரம் படத்தில் நடிப்பதை உறுதி செய்த ஷிவானி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் நடிகை ஷிவானி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
விக்ரம் படத்தில் நடிப்பதை உறுதி செய்த ஷிவானி
ஷிவானி
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும்
ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.
இதனிடையே நடிகை ஷிவானி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாக உள்ளதாகவும், அவர் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாகவும் தகவல் வெளியானது.
இதுகுறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் மவுனம் காத்து வந்த ஷிவானி, தற்போது முதன்முறையாக இதனை உறுதி செய்துள்ளார். சமூக வலைதளம் வாயிலாக கலந்துரையாடிய
ஷிவானியிடம் ரசிகர் ஒருவர், விக்ரம் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். இதற்கு விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் உள்ள கேரவனில் தனது பெயர் இடம்பெற்றிருக்கும்
புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஷிவானி. இதன்மூலம் விக்ரம் படத்தில் நடிப்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ஷிவானி video
குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ஷிவானி video
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும்
ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தினமும் கலர்புல்லான புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதோடு நடன வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.
ஷிவானி
அந்தவகையில் தற்போது, நடிகை ஷிவானி, ரீமிக்ஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரீல்ஸ் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘லாக்டவுன்ல ரொம்ப போர்
அடிக்குது, சரி நம்மளும் ஒரு ரீல்ஸ போடுவோம்’ என அந்த பதிவில் ஷிவானி குறிப்பிட்டுள்ளார். வைரலாகி வரும் இந்த ரீல்ஸ் வீடியோவை, ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளதாக ஷிவானி தெரிவித்துள்ளார்