Tag: லாஸ்லியா
லாஸ்லியா ஹீரோயினாக அறிமுகமாகும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
லாஸ்லியா ஹீரோயினாக அறிமுகமாகும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமான லாஸ்லியா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
லாஸ்லியா ஹீரோயினாக அறிமுகமாகும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
லாஸ்லியா
ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி உள்ள படம் ‘பிரெண்ட்ஷிப்’. இப்படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதில் அவருக்கு ஜோடியாக
பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா நடித்துள்ளார். அவர் ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். மேலும் அர்ஜுன், காமெடி நடிகர் சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
உதயகுமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் உருவாகி உள்ள இப்படத்தை இந்தி, பஞ்சாபி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.
இந்நிலையில், ‘பிரெண்ட்ஷிப்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் 17-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லாஸ்லியா… கலாய்க்கும் நெட்டிசன்கள்
லாஸ்லியா… கலாய்க்கும் நெட்டிசன்கள்
பிக்பாஸ் தமிழின் 3-வது சீசன் மூலம் தமிழக திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இலங்கையை
சேர்ந்த லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, பிரண்ட்ஷிப் உள்ளிட்ட பெயரிடப்படாத மேலும் 4 படங்களில் நடித்து வருகிறார் நடிகை லாஸ்லியா.
லாஸ்லியா
சமூக வலைத்தளத்தில் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இதற்கு ரசிகர்கள் அதிக லைக்குகளை குவிப்பார்கள்.
ஆனால், தற்போது காதில் பூ வைத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு நெட்டிசன்கள் பலரும் பல கருத்துகளை பதிவு செய்து கலாய்த்து வருகிறார்கள்.






