Posted in சினிமா

நடிகையின் வலைத்தள கணக்கு முடக்கம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகையின் வலைத்தள கணக்கு முடக்கம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ், இந்தி என பல மொழிகளில் முன்னணியாக இருக்கும் நடிகை யாமி கவுதமின் வலைத்தள கணக்கை மர்மநபர்கள் முடக்கி உள்ளனர்.

பிரபல நடிகையின் வலைத்தள கணக்கு முடக்கம்.. ரசிகர்கள் அதிர்ச்சி
யாமி கவுதம்


நடிகர், நடிகைகள் முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கணக்குகள் தொடங்கி தங்களின் புகைப்படங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள். இதில் மர்ம நபர்கள் ஊடுருவி

முடக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்நிலையில் நடிகை யாமி கவுதமின் வலைத்தள கணக்கும் தற்போது மர்ம நபர்களால் ஊடுருவி

முடக்கப்பட்டுள்ளது. யாமி கவுதம் தமிழில் கவுரவம், தமிழ் செல்வியும் தனியார்

அஞ்சலும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தியிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

யாமி கவுதமை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம்

பக்கம் முடக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் யாமி கவுதம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தனது

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் வெளிவந்தால் அதனை கண்டுகொள்ள வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள்

விடுத்துள்ளார். யாமி கவுதமின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்ட தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

    Posted in சினிமா

    இயக்குனரை திடீர் திருமணம் செய்த நடிகை

    இயக்குனரை திடீர் திருமணம் செய்த நடிகை

    தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் நடித்து வருபவர் யாமி கவுதம். தமிழில் ‛கவுரவம், தமிழ்ச்செல்வனும்

    தனியார் அஞ்சலும் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், திடீரென இன்று திருமணம் செய்து கொண்டார்.

    இந்தியில் யூரி – சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஆதித்யா தர்ரை தான் இவர் திருமணம்

    செய்துள்ளார். யூரி படத்தில் யாமியும் நடித்திருந்தார். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. தற்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர்.

    இதுப்பற்றி யாமி கவுதம் தனது சமூக வலைத்தள பக்கத்தில், குடும்பத்தினரின் ஆசீர்வாதத்தோடு, நெருங்கிய நபர்கள் மட்டும் பங்குபெற எங்கள் திருமணம் நடந்தது.

    அன்பும், நட்பும் சேர இந்தப் பயணத்தை நாங்கள் தொடங்கும் வேளையில் அனைவரின் ஆசீர்வாதமும், வாழ்த்தும் தேவை என பதிவிட்டுள்ளார்.