Tag: மீரா மிதுன்
நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்
நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்
பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்.
நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்
மீரா மிதுன்
8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா மிதுன். இவர் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீரா மிதுன்
மீரா மிதுன்
மீரா மிதுனை கைது செய்து வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவுக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை மீரா மிதுனின் ஜாமீனுக்காக காத்திருக்கும் ‘பேய காணோம்’ படக்குழு
நடிகை மீரா மிதுனின் ஜாமீனுக்காக காத்திருக்கும் ‘பேய காணோம்’ படக்குழு
செல்வ அன்பரசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேய காணோம்’ படத்தில் நடிகை மீரா மிதுன் பேயாக நடித்து உள்ளாராம்.
நடிகை மீரா மிதுனின் ஜாமீனுக்காக காத்திருக்கும் ‘பேய காணோம்’ படக்குழு
மீரா மிதுன்
குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆர்.சுருளிவேல் தயாரிக்கும் படத்திற்கு ‘பேய காணோம்’ என்று வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளனர். இந்த படத்தில் மீரா மிதுன்
முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் தருண் கோபி, கௌசிக், சந்தியா
ராமச்சந்திரன், கோதண்டம், முல்லை, செல்வகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செல்வ அன்பரசன் என்பவர் இயக்கி உள்ளார்.
வாழ்க்கையில் பணத்தை காணோம், குழந்தையை காணோம், பொருளை காணோம், நண்பனை காணோம், இன்னும் எதை எதையோ காணோம் என்று தேடியிருப்போம். ஆனால் முதன் முதலாக இப்படத்தில் ஒரு பேயை தேடுகிறார்கள்
அவர்கள்
பேயை எதற்காக தேடுகிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்லியுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுவரை 90 சதவீதம் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, எஞ்சியுள்ள படப்பிடிப்பை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். ஏனெனில், இப்படத்தின் நாயகி மீரா மிதுன் சிறையில்
உள்ளதால், படப்பிடிப்பை நடத்த முடியவில்லையாம். அவருக்கு ஜாமீன் கிடைத்தவுடன் இதர
10 சதவீதம் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சிறையில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் மீரா மிதுன்
சிறையில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் மீரா மிதுன்
போலீசார் தன் மீது வழக்குகள் போட்டு தற்கொலைக்கு தூண்டுவதாக நடிகை மீரா மிதுன் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார்.
ஜாமீன் கிடைத்தும் சிறையில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் மீரா மிதுன்
மீரா மிதுன்
பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால், கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே அவர்
மீது எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஊழியரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, நடிகை மீரா மிதுன் மீது நீதிமன்றத்தில், போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில், எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் இன்று ஆஜரானார். அப்போது அவர் மாஜிஸ்திரேட்டிடம், போலீசார் தன் மீது வழக்குகள் போட்டு
தற்கொலைக்கு தூண்டுவதாக புகார் தெரிவித்தார். மேலும் எழும்பூர் போலீசார், இந்த வழக்குகள் குறித்து தன்னிடம் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்றும், தன் சார்பாக வாதாட வழக்கறிஞர் வரவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
மீரா மிதுன்
பின்னர், இந்த வழக்கில் நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மீரா மிதுன் மீது மொத்தமுள்ள நான்கு வழக்குகளில் இதுவரை 3 வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பட்டியலினத்தவர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் மட்டும் அவருக்குஜாமீன் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை மிரட்டல் விடுத்த மீரா மிதுன்
தற்கொலை மிரட்டல் விடுத்த மீரா மிதுன்
தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவரும், பிக்பாஸ் போட்டியில் பங்கு பெற்றவருமான மீரா மிதுன் தற்கொலை செய்ய இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
தற்கொலை மிரட்டல் விடுத்த மீரா மிதுன்
மீரா மிதுன்
தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். இவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து மீராமிதுன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நான் ஒரு அமைப்புக்காக வேலை பார்த்து பிரபலப்படுத்தினேன். 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த அமைப்பில் இருந்து விலகினேன். அதை நடத்தியவர் செய்த அநீதியால் அமைப்பில் இருந்து விலகினேன்.
அவர் எனது பெயரை கெடுத்து, போலி வழக்குகள் தொடர்ந்தார். அதிகாரத்தை வைத்து தொல்லைகள் கொடுத்தார். அதில் இருந்து மீண்டேன். ஆனாலும் தினமும் என்னை பின் தொடர்ந்து, தொல்லைகள் கொடுக்கிறார்.
மீரா மிதுன்
3 வருடங்களாக தொல்லையை அனுபவிக்கிறேன். இவரால் மன அமைதி போய் விட்டது. எனவே தற்கொலைதான் எனக்கு இருக்கும் ஒரே முடிவு. எனது தற்கொலைக்கு அவர்தான் முழு காரணம். சுஷாந்த் சிங் போன்று நான் இறந்த பிறகு அவரை தண்டிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்
தன்னைத்தானே இறந்து விட்டதாக அறிவித்துக் கொண்ட மீரா மிதுன்
தன்னைத்தானே இறந்து விட்டதாக அறிவித்துக் கொண்ட மீரா மிதுன்
சர்ச்சைக்கு பெயர் போன நடிகை மீரா மிதுன் தன்னைத்தானே இறந்து விட்டதாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்.
தன்னைத்தானே இறந்து விட்டதாக அறிவித்துக் கொண்ட மீரா மிதுன்
மீரா மிதுன்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் அவ்வப்போது தனது டுவிட்டரில் சர்ச்சைக்குரிய பதிவு செய்து
பரபரப்பை ஏற்படுத்தி வருவார். குறிப்பாக முன்னணி நடிகர்கள் மீது அவர் கூறும் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் மீராமிதுன் இறந்து விட்டதாகவும் போஸ்ட்மார்ட்டம் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர்
விசாரணையை தொடங்கி விட்டதாகவும் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மீராவே
இந்த பதிவை செய்தாரா அல்லது அவரது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு
யாரேனும் மர்ம நபர்கள் பதிவு செய்தார்களா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
மீரா மிதுன் பதிவு
இது குறித்து அவரே விரைவில் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது






