Tag: மது
இலங்கையில் மது அருந்துவதால் தினமும் 50 பேர்
இலங்கையில் மது அருந்துவதால் தினமும் 50பேர்
இலங்கையில் மது அருந்துவதால் தினமும் 50 பேர் ,இலங்கையில் மது அருந்துவதால் தினமும் 50 பேர் இறக்கின்றனர் ADIC
இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார்
இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 50 பேர் மது அருந்துவதால் இறக்கின்றனர், இது சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத மது அருந்துவதால்
ஏற்படும் இறப்புகளையும் சேர்த்து என்று மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது.
மொத்த மக்கள் தொகையில் 20% க்கும் குறைவானவர்களே இன்னும் மது அருந்துவதாக ADIC நிர்வாக இயக்குனர் சம்பத் டி சேரம் தெரிவித்தார்.
அவர்களில், 34.8% பேர் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், அதே நேரத்தில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் பெண்களின் சதவீதம் 0.5% இல் மிகக் குறைவாகவே உள்ளது.
சட்டவிரோத மது அருந்துவதில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
சட்டவிரோத மது அருந்துவதில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு குறித்தும் அவர் எடுத்துரைத்தார், இது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறையின்படி, நாட்டின் மொத்த மது அருந்துதலில் சுமார் 10% ஆகும்.
மேலும் பேசிய டி சேரம், “நமது நாட்டில் ஒட்டுமொத்த மது பயன்பாட்டைப் பார்த்தால், அது இன்னும் மொத்த மக்கள் தொகையில் 20% க்கும் குறைவாகவே உள்ளது. 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில், 34.8% பேர் மதுவைப்
பயன்படுத்துகின்றனர், அதே நேரத்தில் பெண்களின் எண்ணிக்கை 0.5% ஆக மிகக் குறைவாகவே உள்ளது. சமீபத்தில் ஒரு குறிப்பிடத்தக்க போக்கு
சட்டவிரோத மது பயன்பாட்டின் கூர்மையான அதிகரிப்பு ஆகும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறையின் கூற்றுப்படி, சுமார்
10% மது பயன்பாடு சட்டவிரோதமானது. சட்டவிரோத மதுவால் 5-6 இறப்புகள் ஏற்படுவதைக் கண்டிருக்கிறோம். இருப்பினும், இன்று, மது தினமும் சுமார் 50
பேரைக் கொல்கிறது, இதில் சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத பயன்பாடும் அடங்கும். ஆனாலும், யாரும் இதைப் பற்றிப் பேசுவதில்லை.”
வீடொன்றில் சட்டவிரோத மதுபான சாலை
வீடொன்றில் சட்டவிரோத மதுபான சாலை
வீடொன்றில் சட்டவிரோத மதுபான சாலை இயங்கி வருவதாகவும் குறித்த சட்டவிரோதமான மதுபானசாலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (26) நடைபெற்று கொண்டிருக்கும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்து அங்கஜன் இராமநாதன், உடுப்பிட்டி மக்கள் வங்கிக்கு அருகில் உள்ள ஒரு வீடொன்றில் சட்டவிரோதமான மதுபானசாலை இயங்கி வருகின்றது.
அதாவது மதுபானசாலைக்கு செல்வோர் ‘பெல்’ அடித்து உள்ளே சென்று மதுபானத்தை கொள்வனவு செய்ய முடியும். எனவே, அதனை தடுத்துநிறுத்துமாறு கோரினார்.
இதன்போது குறித்த பிரிவுக்கான பொலிஸ் பொறுப்பாதிகாரியினை உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு குழுத்தலைவரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மதுபானம் அருந்தும் இடங்களிலேயே, அதிகம் கொரோனா தொற்று
மதுபானம் அருந்தும் இடங்களிலேயே, அதிகம் கொரோனா தொற்று
மதுபானம் அருந்தும் இடங்களிலேயே, அதிகம் கொரோனா தொற்று பரவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எனவே, இவ்வாறான இடங்களில் ஒன்றுக் கூடுவதை, கூடியளவு தவிர்த்துக்கொள்ளுவது அவசியம் என்றார்.
மேலும் புதிய தொற்று நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு, சுகாதார அமைச்சு பாரிய அவதானத்துடன் செயற்படுவதாகத் தெரிவித்த அவர், தடுப்பூசிக்கு அப்பாற்பட்ட தொற்று பிரழ்வு , நாட்டுக்குள் நுழைய வாய்ப்புள்ளதென்றார்.
சாராய கடைகள் திறக்க அனுமதி – மகிழ்ச்சியில் குடி மகன்கள்
சாராய கடைகள் திறக்க அனுமதி – மகிழ்ச்சியில் குடி மகன்கள்
இலங்கையில் விதிக்க பட்ட தடைகள் சற்று தளர்த்த பட்டுள்ளன ,இவ்வேளை மதுபான கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது
விதிகளை கடைபிடித்து மதுபானத்தை கொள்வனவு செய்திட முடியும் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது
மேற்படி செய்தியால் குடி மகன்கள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்
யாழில் தண்ணி பாட்டியில் ஈடுபட்ட ஐவர் கைது
யாழில் தண்ணி பாட்டியில் ஈடுபட்ட ஐவர் கைது
யாழ்ப்பாணத்தில் தனிமை படுத்தல் விதிகளை மீறி , ஒன்று கூடி சாராயம் அருந்தி ,பட்டியில்
ஈடுபட்ட ஐவர் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர்
போலீசாருக்கு கிடைக்க பெட்ரா தகவலை அடுத்து இந்த வேட்டை இடம்பெற்றுள்ளது
கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது
கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது
கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது. தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது- அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னையில் இருந்து திருச்சி மண்டலத்திற்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் இன்று அதிகாலை வந்தடைந்தன. அந்த மருந்துகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்
சி.விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் கலெக்டர் சிவராசு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த தடுப்பூசி மருந்துகள் தகுந்த குளிர்பதன முறையில் பராமரிக்கப்பட்டு புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர்,
தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தடுப்பூசி வாகனங்களை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.
பிறகு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் வருகிற 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் அதேநேரத்தில் தமிழகத்தில்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கிவைக்கிறார்.
முதற்கட்டமாக தமிழகத்திற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 டோஸ் நேற்று
சென்னை வந்தடைந்தது. உட னடியாக அவை மண்டல அலுவலகங்களுக்கு குளிர்பதன முறையில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தடுப்பூசியை பொறுத்தமட்டில் முதல் தடுப்பூசி போட்ட 28-வது நாள் இரண்டாவது தடுப்பூசி (டோஸ்) போடவேண்டும். இரண்டாம் தடுப்பூசி போட்ட 14-வது நாள்தான் நமது உடலில் நோய் எதிர்ப்பு
சக்தி உருவாகும். முதல் தடுப்பூசி போடப்பட்டதில் இருந்து 48 நாட்கள் கழித்து தான் நோய் எதிர்ப்பு சக்தி வரும் என்று ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.
முதல் கட்டமாக தடுப்பூசி போடுபவர்கள் போட்ட உடனேயே மது அருந்தக்கூடாது.
தமிழகத்தில் இந்த தடுப்பூசி போடுவதற்கு முன்னதாக ஒத்திகை, ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் திட்டமிட்டபடி தமிழகத்தில் 307 இடங்களில் கொரோனா தடுப்பூசி வருகிற16-
ந்தேதி முதல் தினமும் 100 பேருக்கு போடப்படும். தடுப்பூசியால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. தடுப்பூசி பற்றி சென்னை
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரிச்சார்த்த முறையில் தடுப்பூசி போட்டு பரிசோதித்து, ஆய்வும் செய்துள்ளோம்.
இதில் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. எனவே தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம். இந்த தடுப்பூசி மூலம் பொதுமக்கள் அச்சப்பட
வேண்டாம். முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நானும் முன் மாதிரியாக
தேவைப்பட்டால் அனுமதி பெற்று தடுப்பூசி போட தயாராக இருக்கிறேன்.
இப்போது கூட இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் கொரோனா பரவி வருகிறது. ஆஸ்பத்திரியில் படுக்கைகள் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் தமிழகம்
தவிர்த்து பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு 3 சதவீதமாக இருக்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் 1.2 சதவீதமாக இருக்கிறது. இது மிகப் பெரிய வெற்றி. இங்கிலாந்து, பெல்ஜியம்
ஆகிய நாடுகளே ஆச்சரியப்படும் அளவுக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
வலுவான சுகாதார கட்டமைப்பு மற்றும் முதல்வரின் போர்க்கால நடவடிக்கை, திட்டமிடுதல்களால் இன்று கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.
சாராய கடைகளை மூடுமாறு உத்தரவு- கொதிக்கும் குடி மகன்கள்
சாராய கடைகளை மூடுமாறு உத்தரவு- கொதிக்கும் குடி மகன்கள்
இலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு இலங்கை அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
ஊரடங்கு தளர்த்த பட்ட நிலையில் குடிமகன்கள் முண்டியடித்து சாராய கடைகளில் நிரம்பி வழிந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து
இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது










