Tag: பிரபு தேவா
ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவா
.ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவா
இந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குனரும் நடிகருமான பிரபு தேவா, ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவா.. வைரலாகும் வீடியோ
பிரபு தேவா
ஐஸ்வர்யா-தனுஷ் திருமணம் உறவு முறிந்த பிறகு, ஐஸ்வர்யா தனது இயக்குனர் வேலையில் ஆர்வம் காட்டுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. அதன்படி ஐஸ்வர்யா தனது ‘பயணி’ மியூஸிக் ஆல்பம் வீடியோ வேலைகளை ஆரம்பித்துள்ளதாக
அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கான பணிகள் ஹைதராபாத்தில் அவர் தொடங்கியிருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில்
இப்பாடல் உருவாகியுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி என இசை கலைஞர்கள் பாடியுள்ளனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இப்பாடல் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நடன இயக்குனரும், நடிகருமான பிரபு தேவா ஐஸ்வர்யா ரஜினிகாந்தை வாழ்த்தி, நெகிழ்ந்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்
. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
என் படத்தில் அது இல்லை – பிரபு தேவா
என் படத்தில் அது இல்லை – பிரபு தேவா
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பணியாற்றி வரும் பிரபு தேவா, தற்போது தேள் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பது என் படத்தில் இல்லை – பிரபு தேவா
பிரபு தேவா
பிரபு தேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தேள்’. ஹரிகுமார் இயக்கியுள்ள
இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். அம்மாவாக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படம் குறித்து பிரபுதேவா கூறும்போது, ‘இயக்குநர் ஹரிகுமார் மிகச்சிறப்பான பணியினை செய்துள்ளார். இயல்பை விடவும் பலமடங்கு அற்புதமான உழைப்பை இப்படத்திற்கு தந்துள்ளார்.
ஹரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் உதவி நடன இயக்குனர்களாக பணியாற்றியிருக்கிறோம். இப்போது அவர் மீண்டும் புதிய தளத்தில் தன்
திறமையை நிரூபிக்கவுள்ளார். உண்மையாகவே இந்த திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. என் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது நடனம் தான். ஆனால்,
இந்தப்படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை. மேலும் நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல் முறையாக நடித்திருக்கிறேன்.
பிரபுதேவா
நான் என் வழக்கமான நடிப்பை நடிக்கிறேனா என என்னை செக் செய்து கொண்டே இருப்பார் இயக்குனர். நான் அம்மாதிரி நடித்தால் உடனே அதை மாற்றுவார்.
ஈஸ்வரி மேடம் தமிழில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். சம்யுக்தா மிக பப்ளியான அழகான நாயகியாக மிளிர்கிறார்.
அவரது நடிப்பு இப்படத்தில் மிக முக்கிய அம்சமாக இருக்கும். இப்படம் மிக அழுத்தமான படைப்பாக, அனைவருக்கும் பிடிக்கும் படைப்பாக இருக்கும்’ என்றார்.
பெண் மருத்துவரை திருமணம் செய்த பிரபு தேவா
பெண் மருத்துவரை திருமணம் செய்த பிரபு தேவா
சினிமா
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் பிரபுதேவா, பெண் மருத்துவரை திருமணம் செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பெண் மருத்துவரை திருமணம் செய்துவிட்டாரா பிரபு தேவா?
பிரபுதேவா
பிரபுதேவா நடனக் கலைஞர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அதையும் தாண்டி நடிப்பு, இயக்கம் என்று தன் திறமையை நிரூபித்து வருபவர். பாலிவுட்டில் சென்று தென்னிந்திய இயக்குனராக தன்
முத்திரையைப் பதித்தவர். நயன்தாராவின் வருகைக்குப்பின் அவரது வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.
அவையெல்லாம் ஓய்ந்து படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் பிரபுதேவா ஒரு பெண்ணுடன் சமீபத்தில் திருப்பதிக்கு சென்றிருக்கிறார். அந்தப் புகைப்படம் இப்போது சமூக
வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அவருடன் இருக்கும் பெண்ணை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் பரவி வருகிறது.
பிரபுதேவா
அவர் ஒரு பெண் மருத்துவர் என்றும், பரிசோதனை செய்யப்போனபோது, அவரிடம் நட்பு ஏற்பட்டு இந்தத் திருமணம் நடந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.






