பாடசாலை மாணவி மர்மமான முறையில் பலி
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவி மர்மமான முறையில் பலி

பாடசாலை மாணவி மர்மமான முறையில் பலி

களுத்துறை சிறிகுருச சந்தியில் உள்ள தற்காலிக விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயதுடைய பாடசாலை மாணவி மேலும் மூவருடன் பிரவேசிக்கும் CCTV காட்சிகள் “அத தெரண” விற்கு கிடைத்துள்ளது.

விசாரணையில், குறித்த சிறுமி நேற்று (06) பிற்பகல் குறித்த பகுதியில் உள்ள விடுதிக்க மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த குழுவினர் நேற்று மாலை 6.30 மணியளவில் குறித்த விடுதிக்கு சென்றுள்ளனர்.

அவர்கள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து அந்தந்த விடுதியில் இரண்டு அறைகளை முன்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், இரண்டு அறைகளை முன்பதிவு செய்த போதும், நான்கு பேரும் ஒரே அறையில் இருந்து மது அருந்திக் கொண்டிருந்ததை விடுதி ஊழியர் ஒருவர் பார்த்துள்ளார்.

பாடசாலை மாணவி மர்மமான முறையில் பலி

பின்னர், ஒரு இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் விடுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.

சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, மற்ற இளைஞனும் பீதியுடன் விடுதியை விட்டு வெளியேறுவதை ஊழியர்கள் பார்த்துள்ளனர்.

அப்போது விடுதிக்கு உணவு எடுக்க வந்த நபர் ஒருவர் விடுதியை ஒட்டியுள்ள ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக கிடப்பதாக விடுதி ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்ட போது குறித்த சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

நாகொட பிரதேசத்தை சேர்ந்த களுத்துறை பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி விடுதிக்குள் செல்வதற்கு வயது தடையாக உள்ளதால் வேறு ஒருவரின் தேசிய அடையாள அட்டையை காண்பித்து விடுதிக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிசார் இதுவரை பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

திடீரென விடுதி அறையை விட்டு பீதியுடன் வெளியேறிய இளைஞன், முன்னதாக விடுதியில் இருந்து வெளியேறிய இளைஞனையும், யுவதியையும் அழைத்து அவசரம் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

பாடசாலை மாணவி மர்மமான முறையில் பலி

இறந்த சிறுமி மூன்றாவது மாடியில் இருந்து ரயில் தண்டவாளத்தில் குதித்ததாக கூறிய அவர் பின்னர் காரில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், ரயில் தண்டவாளத்தில் கிடந்த மாணவியின் சடலத்தை மற்றைய இளைஞனையும், யுவதியையும் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு அங்கிருந்து வெளியேறி இரவு 9.30 மணியளவில் பொலிஸில் சரணடைந்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமியுடன் கடைசி நேரம் வரை தங்கியிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபரை கண்டுபிடிக்க களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சந்தேக நபர் தற்போது இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளதோடு, அவர் இரண்டாவது திருமணம் செய்த பெண்ணிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

Featured

Loading...
ரயில் மோதி வாலிபன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி

புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி

மாத்தறையிலிருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (25) மாத்தறை, நுபே புகையிரத கடவைக்கும் பாம்புரான புகையிரத நிலையத்திற்கும் இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹித்தெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பெந்தோட்டகேவத்த என்ற பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மேலும் மூன்று நண்பர்களுடன் விருந்துக்கு சென்றுவிட்டு புகையிரத தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.

சடலம் மாத்தறை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Error: View 9293b2au4w may not exist
தன்னுயிரை கொடுத்து 7 பேரின் உயிர் காத்த பாடசாலை மாணவி
Posted in இலங்கை செய்திகள்

தன்னுயிரை கொடுத்து 7 பேரின் உயிர் காத்த பாடசாலை மாணவி

தன்னுயிரை கொடுத்து 7 பேரின் உயிர் காத்த பாடசாலை மாணவி

மூளைச்சாவு அடைந்த நோயாளர்களின் உடல் உறுப்புக்களை வேறு நோயாளர்களுக்கு பொருத்தும் வெற்றிகரமான சத்திர சிகிச்சைகள் வைத்திய துறையில் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், மூளைச்சாவு அடைந்த பாடசாலை மாணவி ஒருவரின் உடல் உறுப்புக்கள் 7 பேருக்கு பொருத்தப்பட்ட சம்பவம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது.

குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியில் உயர்தரம் பயிலும் 19 வயதுடைய விஹகனா ஆரியசிங்க என்ற யுவதி திடீர் உடல் நலக்குறைவால் மூளைச்சாவு உயிரிழந்த நிலையில் அவரின் உடல் உறுப்புக்கள் இவ்வாறு வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

குருணாகல், அம்பன்பொல நகரில் வசிக்கும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் விஹகனா ஆரியசிங்க இளைய பிள்ளையாவார்.

அவருக்கு ஒரு மூத்த சகோதரியும் ஒரு சகோதரனும் உள்ளனர். க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் வெற்றிகரமாக சித்தியடைந்த விஹங்கன குருணாகல் மலியதேவ மகளிர் கல்லூரியில் வணிக ரீதியில் உயர்தரப் பரீட்சைக்கு ஆங்கில மொழி மூலம் கல்வி கற்று வந்தவர் ஆவார்.

தன்னுயிரை கொடுத்து 7 பேரின் உயிர் காத்த பாடசாலை மாணவி

இந் நிலையில் விஹகனா மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த நிலையில் அவரது இதயம் மற்றும் நுரையீரல் மற்றுமொரு நோயாளிக்குப் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் விஹகனாவிடம் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு சிறுநீரகங்களும், ஆபத்தான நிலையில் உள்ள இரண்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது.

விஹகனாவிடம் இருந்து எடுக்கப்பட்ட கல்லீரல் மற்றும் கண்களின் சவ்வுகள் மேலும் மூன்று பேரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவியுள்ளன.

விஹகனாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள் மூலம் மொத்தம் 7 பேர் உயிர் காக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதயம் மற்றும் நுரையீரல் இரண்டையும் ஒரே நோயாளிக்கு மாற்றுவதற்கான முதல் அறுவை சிகிச்சை இலங்கையின் சிறப்பு வைத்தியர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு காரணமாக ஆபத்தான நிலையிலிருந்த ஒருவருக்கு இந்த இரண்டு உறுப்புகளும் மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இந்த உறுப்புகள் தனித்தனியாகப் பொருத்தப்பட்டிருந்தாலும், ஒரே நேரத்தில் இதுபோன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது இலங்கையில் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No posts found.
ஈரான் 650 பாடசாலை மாணவிகள் மீது நச்சு தாக்குதல்| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ஈரான் 650 பாடசாலை மாணவிகள் மீது நச்சு தாக்குதல்| உலக செய்திகள்

ஈரான் 650 பாடசாலை மாணவிகள் மீது நச்சு தாக்குதல்| உலக செய்திகள்

உலக செய்திகள் |ஈரானில் உள்ள முப்பது பாடசாலைகளை சேர்ந்த மாணவிகள் மீது நச்சு புகை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

பாடசாலை மிக அருகில் வைத்து வெளிவந்த ஒருவித ,
நச்சு புகை காரணமாக மாணவிகள் புதிய நோயினால் பாதிக்க பட்ட நிலையில் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இந்த சம்பவத்தை அடுத்து மாணவர்கள் பாடசாலை ,
வரவில் வீழ்ச்சி கொண்டுள்ளதுடன் .
பல பாடசாலைகள் அடித்து மூட பட்டுள்ளது .

இது இஸ்ரேலின் திட்டமிடப்பட்ட வலிந்து தாக்குதல் ,நடவடிக்கையில்
ஒன்றாக இருக்கலாம் என நம்ப படுகிறது .