Tag: துண்டிக்கப்பட்ட
Posted in இலங்கை செய்திகள்
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 02/09/2024
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு ,கொஸ்கொட கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மனித சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொஸ்கொட பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவ்வாறு ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளமையால் குறித்த நபர் பல நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்

- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது









