சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய பிரான்ஸ் மாப்பிள்ளை
Posted in இலங்கை செய்திகள்

திருமண வீட்டில் மோதல் – ஒருவர் பலி

திருமண வீட்டில் மோதல் – ஒருவர் பலி

நேற்று (17) இரவு அங்குருவாதொட்ட படகொட சந்தியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த நபரின் சடலம் இன்று அதிகாலை படகொடை வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் படகொட யதவர பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய மங்கள பிரேமவர்தன என்ற நபராவார்.

சம்பவத்தில் காயமடைந்த இரு குழுக்களைச் சேர்ந்த 5 பேர் கொழும்பு, நாகொட மற்றும் ஹொரணை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படகொட பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக படகொட சந்தியில் இந்த மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

அங்குருவாதொட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

பிறப்பு இறப்பு திருமண சான்றிதழ் வழங்கல் நிறுத்தம்

பிறப்பு இறப்பு திருமண சான்றிதழ் வழங்கல் நிறுத்தம்

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பிரதிகள் வழங்கப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உறுதிபடுத்தப்பட்ட பிரதிகளை வழங்கும் LNG தரவுக் கட்டமைப்பு செயலிழந்திருப்பதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நாடளாவிய ரீதியில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பிரதி விநியோகம் தடைப்பட்டுள்ளது.

அந்த தரவுக் கட்டமைப்பை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த சேவை திருத்தப்பட்டதன் பின்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று திணைக்களம்
விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Posted in Uncategorized

    லண்டன் மிச்சம் திருமண வீட்டில் ஒலித்த புலிகள் பாட்டு – வீடியோ

    லண்டன் மிச்சம் திருமண வீட்டில் ஒலித்த புலிகள் பாட்டு – வீடியோ

    லண்டன் மிச்சம் பகுதியில் நேற்று 10 ஆம் திகதி இடம்பெற்ற தமிழர்கள் திருமண நிகழ்வு ஒன்றில்
    தமிழீழ விடுதலை புலிகளின் பாடல்
    (தமிழீழத்தின் அழகு தனி அழகு ) ஒன்று மிக கம்பீரமாக முழங்கியது

    விடுதலை புலிகளின் செயல்பாடுகள் ,அவர் தம் எழுச்சி பாடல்களை முடங்க வைத்து ,எழுச்சிகளிற்கு தடை விதித்து வரும் சிங்கள அரச பயங்கவாதத்தினால் செயல் பாடுகள் முடக்கிவிட பட்டுள்ள நிலையிலும் ,

    சில ஈழ எழுச்சி கொண்ட தமிழ் இசை பாடகர்கள் துணிவுடன் விடுதலை புலிகள் ,தமிழ் எழுச்சி பாடல்களைப் பாடி வருவது மிக பாராட்டிட வேண்டியதும் ,இவ் வாறானவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டிய தேவைபாடும் சமகாலத்தில் உள்ளது

    ஐயா செல்லப்ப அவர்கள் உருகி உருகி பாடிய அந்த பாடலை அதே சுருதியுடன் இந்த பாடகர் திறனோடும்,உணர்வுடனும் பாடி அசத்தியுள்ளது எம்மை மெய் சிலிர்க்க வைத்துள்ளது ,மேலும் இந்த இசை ஒலிக்க

    பின் புலத்தில் உதவிய ஒலி அமைப்பாளருக்கும் இவ்வேளையில் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்

    தொடரட்டும் உங்கள் பணி இவ்வாறான இசை பாடல்களை நமக்கு தொடராக அனுப்பி வையுங்கள் என்றும் பிரசுரிக்க தயங்க மாட்டோம்

    • நிருபர் வன்னி மைந்தன் –

    தமிழீழத்தின் அழகு தனி அழகு video click here

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் 16 வயது முதல் திருமண செய்து கொள்ள சட்டம் அமூல்

    இலங்கையில் 16 வயது முதல் திருமண செய்து கொள்ள சட்டம் அமூல்

    இலங்கையில் விசேட சந்தர்ப்பங்களில் 16 முதல் 18 வயதினர் திருமணம் செய்து கொள்ள சட்ட

    திருத்தத்தில் மாற்றங்கள் மேற்கொள்ள பட்டுள்ளன

    இதனால் 16 வயது முதலானவர்கள் வாலிபர்கள் என்ற அடெல் என்ற பிரிவுக்குள் அடக்க படுகின்றனர் என தெரிவிக்க படுகிறது

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி

      இலங்கையில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி

      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுக்கு தடை

      விதிக்க பட்டுள்ளது ,இதனை அது நாளை முதல் புதிய திருத்த சட்டம் வெளியிட படவுள்ளது

      இதில் திருமண நிகழ்வுகள் மற்றும் ,பொது நிகழ்வுகளில் மட்டு படுத்த பட்ட மக்கள் கலந்து

      கொள்ளும் புதிய விதிகள் அறிவிக்க பட்டு நிகழ்வுகள் நடத்த அனுமதி வழங்க படவுள்ளதாக தெரியவருகிறது

        Posted in Uncategorized

        பொது நிகழ்வுகள் நடத்த இரு வாரங்களுக்கு தடை – கடுப்பில் காதலர்கள்

        பொது நிகழ்வுகள் நடத்த இரு வாரங்களுக்கு தடை – கடுப்பில் காதலர்கள்

        இலங்கையில் பரவி வரு கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலை அடுத்து பொது நிகழ்வுகள்

        நடத்திட இரு வாரங்களுக்கு தடை விதிக்க பட்டுள்ளது

        இதனால் திருமண விழாக்கள் உள்ளிட்டவைக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது

        அரசின் விதிகளை மீறி நடத்த முற்பட்டால் அவர்களுக்கு பல்லாயிரம் தண்டம் அறவிட படும் என

        எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளதுடன் ,அந்த நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் 14 நாட்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

          Posted in உலக செய்திகள்

          திருமண வீடுகளில் திருடுவதற்காக குத்தகைக்கு எடுக்கப்பட்ட சிறுவர்கள்

          திருமண வீடுகளில் திருடுவதற்காக குத்தகைக்கு எடுக்கப்பட்ட சிறுவர்கள்

          திருமண வீடுகளில் திருடுவதற்காக ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை கொடுத்து சிறுவர்களை குத்தகைக்கு எடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

          திருமண வீடுகளில் திருடுவதற்காக ரூ.12 லட்சம் வரை குத்தகைக்கு எடுக்கப்பட்ட சிறுவர்கள்

          டெல்லி மற்றும் வடமாநிலங்களில் தற்போது திருமண காலம் ஆகும். சமீபத்தில் திருமணம் நடைபெற்ற சில மண்டபங்களில் விலையுயர்ந்த நகைகள் மற்றும் ரொக்கப்பணம் திருடு போனதாக

          டெல்லி போலீசுக்கு புகார்கள் வந்தன. அவை தொடர்பாக விசாரித்ததில், ரூ.1 கோடி மதிப்புக்கு மேல் பணம், நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து முக்கியமான

          திருமணங்களை போலீசார் கண்காணிக்க தொடங்கினர். பின்னர் அங்கு பதிவான வீடியோ காட்சிகளை பார்வையிட்டனர்.

          அப்போது ஒரே நபர்கள் பல திருமணங்களில் நடமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் 5 வாலிபர்கள் மற்றும் 2 சிறுவர்களை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

          அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகள், பரிசுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், அவர்கள் அனைவரும் மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது

          தெரியவந்தது. இந்த கும்பலில் உள்ள சிறுவர்கள் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை கொடுத்து குத்தகைக்கு எடுக்கப்பட்டவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது.

          குத்தகைக்கு எடுக்கப்பட்ட அவர்களுக்கு நூதன திருட்டுகள் பற்றி சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளன.

          இந்த கும்பலில் இன்னும் பலபேர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

          Posted in இலங்கை செய்திகள்

          திருமண நிகழ்வுகளுக்கு படை எடுக்கும் மக்கள்

          திருமண நிகழ்வுகளுக்கு படை எடுக்கும் மக்கள்

          திருமண வைபவங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

          இதுதொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்களினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு:

          வைபவ மண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையில் 50 சதவீதமானோர் அல்லது ஆகக்கூடிய வகையில் 300 பேருக்கு (

          மணமகன் உள்ளிட்ட குழு, மணமகள் உள்ளிட்ட குழு , இசைக்குழு மற்றும் ஏனைய கலைஞர்கள் அடங்கலாக) குறைந்த

          எண்ணிக்கையில் திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்கு 2020 ஜுலை 6ஆம் திகதி தொடக்கம் அனுமதி வழங்கப்படுகின்றது. இதே

          போன்று திருமண வைபவத்தில் கலந்து கொள்வவோருக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளியை கடைபிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

          வைபவ மண்டபங்களில் கலந்துகொள்வதற்காக இதற்கு முன்னர் வழங்கிய

          ஆலோசனைகள் இதற்கும் ஏற்புடையதாகும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.