Posted in சினிமா

காதலனுக்கு முத்த மழை பொழிந்த சுருதிஹாசன்

காதலனுக்கு முத்த மழை பொழிந்த சுருதிஹாசன்

நடிகை சுருதிஹாசன், தனது காதலன் சாந்தனுவை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தபடி புகைப்படம் ஒன்றை எடுத்து அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

காதலனுக்கு முத்த மழை பொழிந்த சுருதிஹாசன் – வைரலாகும் புகைப்படம்
சுருதிஹாசன்


நடிகை சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபகாலமாக அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு

ஹசாரிகாவுடன் நெருங்கிய பழகி வருகிறார். அவரை சுருதிஹாசன் காதலிப்பதாகவும்

கூறப்படுகிறது. அவ்வப்போது காதலனுடன் சுருதிஹாசன் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் பரவி வருகிறது.

அந்தவகையில், சமீபத்தில் காதலன் சாந்தனுவுடன் மும்பையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு சென்றிருந்தார் சுருதிஹாசன். அங்கு காதலனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி

புகைப்படம் ஒன்றை எடுத்து அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

நடிகை சுருதிஹாசனின் இன்ஸ்டாகிராம் பதிவு
நடிகை சுருதிஹாசன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம்

சுருதிஹாசன் வெளியிட்டுள்ள தற்போதைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

சுருதியின் காதலன் சாந்தனு ஹசாரிகா ராப் பாடகர் ஆவார். இதுதவிர டூடுல் கலைஞராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Posted in சினிமா

    பண கஷ்டத்தில்க் தவிக்கு கமல் மகள் சுருதி

    பண கஷ்டத்தில்க் தவிக்கு கமல் மகள் சுருதி

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன் மற்றவர்கள் போல் நானும் பொருளாதார பிரச்சினையில் இருப்பதாக பேட்டியளித்துள்ளார்.

    பொருளாதார பிரச்சினையில் ஸ்ருதி ஹாசன்
    ஸ்ருதிஹாசன்


    விஜய்சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ள லாபம் படப்பிடிப்பு முடிந்து கொரோனாவால்

    திரைக்கு வராமல் முடங்கி உள்ளது. தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாராகும் சலார் படத்திலும் நடிக்கிறார்.

    ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில், ”கொரோனா காலத்தில் படப்பிடிப்பு நடத்துவது சிக்கலாக

    உள்ளது. கொரோனா தொற்று முடிவது வரை காத்திருக்கவும் முடியாது. முக கவசம் அணியாமல் படப்பிடிப்பு அரங்கில் இருப்பதும் இயலாத காரியம்.

    மற்றவர்கள் போல் எனக்கும் பொருளாதார பிரச்சினை இருப்பதால் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே படப்பிடிப்புகள் தொடங்கியதும் நான் படப்பிடிப்புக்கு செல்வேன்.

    ஸ்ருதிஹாசன்

    கடந்த 11 ஆண்டுகளாக சுயமாக சம்பாதிக்கிறேன். எனது தேவைகளை நானே பூர்த்தி செய்கிறேன். எனது செலவுகளையும் நானே கவனித்துக்கொள்கிறேன். சொந்த வாழ்க்கை மற்றும்

    தொழில் தொடர்பான முடிவுகளை நானே எடுக்கிறேன். சுயமாக செயல்படுவதில் பெருமை கொள்கிறேன்.

    கொரோனா தொற்றுக்கு முன் சொந்தமாக வீடு வாங்கி இருக்கிறேன். கடவுள் எனக்கு எப்போதும் துணையாக இருக்கிறார்

    என்று நம்புகிறேன். கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி தற்போது வீட்டில் இருக்கிறேன். அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

      Posted in சினிமா

      தேர்தலில் தோற்றாலும்… எனது தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன்- சுருதி.

      தேர்தலில் தோற்றாலும்… எனது தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன்- சுருதி.

      கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், பாரதீய ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

      தேர்தலில் தோற்றாலும்… எனது தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன்- சுருதிஹாசன்
      கமல்ஹாசன், சுருதிஹாசன்


      தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் தோல்வியை தழுவினார்.

      கமல்ஹாசன், பாரதீய ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

      சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் தோல்வி அடைந்தாலும், அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்துள்ளார் என்று அவரது கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

      சுருதிஹாசனின் இன்ஸ்டாகிராம் பதிவு

      இந்நிலையில் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான சுருதிஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் கமல்ஹாசன் கையில் டார்ச் லைட் வைத்திருக்கும் (கட்சியின் சின்னம்) புகைப்படத்தை

      வெளியிட்டு, அதில் ‘என்னுடைய தந்தையை நினைத்து எப்போதும் நான் பெருமைப்படுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளா

        Posted in சினிமா

        வாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு போலீஸ் நம்பரை கொடுத்த சுருதி ஹாசன்

        வாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு போலீஸ் நம்பரை கொடுத்த சுருதி ஹாசன்

        தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சுருதிஹாசன், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

        வாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு போலீஸ் நம்பரை கொடுத்த சுருதி ஹாசன்
        சுருதி ஹாசன்


        கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிராக், வக்கீல் சாப் ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றன.

        தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

        சுருதி ஹாசனின் டுவிட்டர் பதிவு

        அப்போது ரசிகர் ஒருவர் ‘மேடம், பிளீஸ் உங்களது வாட்ஸ் ஆப் நம்பரைக் கொடுங்கள்’ என்று கேட்டிருக்கிறார்.

        இதற்கு பதிலளித்த நடிகை சுருதி ஹாசன், போலீஸ் அவசர உதவி எண் ஆன 100 என்ற நம்பரைக் குறிப்பிட்டிருந்தார். நடிகர் சுருதி ஹாசனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

          Posted in Uncategorized

          சுருதிக்கு திருமணமாம்

          சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை சுருதிஹாசன், திருமணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

          இந்த ஆண்டு திருமணமா? – சுருதிஹாசன் விளக்கம்
          சுருதிஹாசன்
          கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக ஒரு ரவுண்டு வந்தார். இவர் நடித்த படங்கள் கடைசியாக 2017-ல் வெளியாகின. அதன் பின்னர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.

          தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் சுருதிஹாசன். சமீபத்தில் இவர் நடித்த ‘புத்தம் புது காலை’ என்கிற ஆந்தாலஜி படம் வெளியானது. தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

          சுருதிஹாசன்

          அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு பாய் பிரண்ட் இருக்கிறாரா? என கேள்வி கேட்டார். அதற்கு ஆமாம் என பதிலளித்த சுருதி, இந்த ஆண்டு திருமணமா? என்ற மற்றொரு ரசிகரின் கேள்விக்கு, இல்லை என பதிலளித்தார். மேலும் மற்றொரு ரசிகர் நீங்கள் தற்போது காதலில் இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்ப, நான் எப்போதுமே காதலில் தான் இருக்கிறேன் என கூறினார் சுருதிஹாசன்

          Posted in சினிமா

          காதலை கண்டுபிடிக்க முடியாது – சுருதி

          நடிகை -காதலை கண்டுபிடிக்க முடியாது – சுருதி

          தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள சுருதிஹாசன், காதலை யாராலும் கணிக்க முடியாது என கூறியுள்ளார்.

          காதலை யாராலும் கணிக்க முடியாது – சுருதிஹாசன்
          சுருதிஹாசன்


          தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்த சுருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேலை காதலித்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து

          விட்டார். இசை கச்சேரிகளுக்காக சமீப காலமாக வெளிநாடுகளில் சுற்றி வந்த அவர் இப்போது மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார்.

          ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் ரவி தேஜாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தி படமும் கைவசம் உள்ளது.

          அவர் அளித்த பேட்டி வருமாறு:- “காதலில் விழும் சந்தர்ப்பங்களை யாரும் கணிக்க முடியாது.

          எப்போது யாருக்கு காதல் வரும் என்பதையும் சொல்ல முடியாது. என்னை காதலிக்கும் ஒரு நல்ல மனிதர் வாழ்க்கை துணையாக வரவேண்டும் என்று

          ஆசைப்படுகிறேன். அந்த நல்ல மனிதருக்காக நான் காத்து இருக்கிறேன். கண்டிப்பாக அப்படி ஒரு நல்லவர் கிடைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

          சுருதிஹாசன்

          நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களாகவே இருப்பார்கள். இடையில் மாறிவிட மாட்டார்கள்.

          காதலை கண்டுபிடிக்க முடியாது – சுருதி

          அது மாதிரி, கெட்டவர்கள் நல்லவர்கள் மாதிரி நடித்தாலும் கடைசியில் கெட்டவர்களாகவே மாறி விடுவார்கள்.

          ஆனாலும் கெட்ட மனிதர்களின் அறிமுகம் ஒரு அனுபவத்தையும், பாடத்தையும் கற்றுக்கொடுக்கும்.

          இதையும் தாண்டி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். சுயநலமில்லாமல் நேசிக்கும் ஒரு மனிதரை இப்போது நான்

          எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அந்த மாதிரி நல்லவர் எனக்கு கிடைக்காமல் போகமாட்டார்.” இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

          முன்னாள் காதலனை கைவிட்டு புதிய நபர் ஒருவருடன் சுற்றி வருவதாக வெளியான செய்தியை அடுத்து இவரது பேச்சு இப்படி வெளியாகியுள்ளது

          நெருப்பு இலலாமல் புகையுமா என நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர் .

          கொட்டலில் பிரபல நபருடன் ஒன்றாக இருந்து கிசு கிசு காட்சிகளை இவரை திட்ட மீட்டு வெளியிட்டதாக ஒரு தகவல் உண்டு