Tag: சினிமா
விஜய்க்கு சுற்றிப்போடும் ராஷ்மிகா.. வைரலாகும் தளபதி 66 பூஜை
விஜய்க்கு சுற்றிப்போடும் ராஷ்மிகா.. வைரலாகும் தளபதி 66 பூஜை
பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் தளபதி 66 படத்தில் இணைந்திருக்கும் ராஷ்மிகா மந்தனா, விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
விஜய்க்கு சுற்றிப்போடும் ராஷ்மிகா.. வைரலாகும் தளபதி 66 பூஜை
தளபதி 66 பூஜை
விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன்
திலீப்குமார் இயக்கிவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். விறுவிறுப்பாக இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து
வருகிறது. பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். ‘தளபதி 66’
என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு
தயாரிக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள நடிகை குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி இப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார்.
இந்நிலையில் விஜய்யின் 66-வது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் விஜய், ராஷ்மிகா, இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர்
தில் ராஜு உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர். இதில் விஜய்க்கு ராஷ்மிகா சுற்றிப்போடும் போன்ற புகைப்படங்கள்
மற்றும் பூஜை புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கணவன் புகைப்படத்தை பகிர்ந்த சமந்தா
கணவன் புகைப்படத்தை பகிர்ந்த சமந்தா
நாக சைதன்யா – சமந்தா திருமண பிரிவுக்கு பிறகு நாக சைதன்யாவின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
நாக சைதன்யா புகைப்படத்தை பகிர்ந்த சமந்தா
சமந்தா
மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு பலமொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்
பிடித்தவர் நடிகை சமந்தா. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமாவில் தக்கவைத்துக்கொண்டார்.
இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யா என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண உறவு 4 ஆண்டுகள்
நீடித்து வந்த நிலையில் திடீரென தனது கணவரை பிரிந்தார். அதன் பின்னர் இவர் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடிப்பதில் முழுகவனம்
செலுத்தி வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார்.
சமீபத்தில் நாக சைதன்யாவும், சமந்தாவும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாகவும் இப்படத்தை ’ஓ பேபி’ படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டி
இயக்கவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாகின. இந்நிலையில் விவாகரத்துக்கு பின்னர் நடிகை சமந்தா அவருடைய சமூக
வலைத்தளப் பக்கத்தில் நாக சைதன்யாவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 2019-ஆம் ஆண்டு நாக சைதன்யா சமந்தா இருவரும் இணைந்து நடித்து
வெளியான மஜிலி என்ற படத்தின் 3 ஆண்டு நிறைவு செய்ததை
வெளிப்படுத்தும் விதமாக இந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகையின் வலைத்தள கணக்கு முடக்கம்.. ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகையின் வலைத்தள கணக்கு முடக்கம்.. ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழ், இந்தி என பல மொழிகளில் முன்னணியாக இருக்கும் நடிகை யாமி கவுதமின் வலைத்தள கணக்கை மர்மநபர்கள் முடக்கி உள்ளனர்.
பிரபல நடிகையின் வலைத்தள கணக்கு முடக்கம்.. ரசிகர்கள் அதிர்ச்சி
யாமி கவுதம்
நடிகர், நடிகைகள் முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கணக்குகள் தொடங்கி தங்களின் புகைப்படங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள். இதில் மர்ம நபர்கள் ஊடுருவி
முடக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்நிலையில் நடிகை யாமி கவுதமின் வலைத்தள கணக்கும் தற்போது மர்ம நபர்களால் ஊடுருவி
முடக்கப்பட்டுள்ளது. யாமி கவுதம் தமிழில் கவுரவம், தமிழ் செல்வியும் தனியார்
அஞ்சலும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தியிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.
யாமி கவுதமை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம்
பக்கம் முடக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் யாமி கவுதம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தனது
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் வெளிவந்தால் அதனை கண்டுகொள்ள வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள்
விடுத்துள்ளார். யாமி கவுதமின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்ட தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மனைவி மீது இமான் திருட்டு வழக்கு
மனைவி மீது இமான் திருட்டு வழக்கு
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான். இவர் இசையில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல படங்களுக்கு இமான்
இசையமைத்து வருகிறார். சமீபத்தில் அவருடைய மனைவி மோனிகாவை பிரிந்து விட்டதாக அறிவித்தார்.
2008-ஆம் ஆண்டு மோனிகா என்பவரை இமான் திருமணம் செய்து கொண்டார்
. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் கடந்த ஆண்டு நவம்பர்
மாதமே விவாகரத்து செய்ததாக கூறப்பட்டு பிறகு டிசம்பர் இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில், டி.இமான் அவருடைய முன்னாள் மனைவி மோனிகா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக இமான் தாக்கல் செய்துள்ள மனுவில், “எனது இரண்டு மகள்களுடைய பாஸ்போர்டுகள் தன்னிடம் இருக்கிறது.
ஆனால் மோனிகா அதை மறைத்து முறைகேடாக புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளார்.
இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு தொடர்பான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில்,
மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் மோனிகா இருவரும் இது குறித்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதை விருந்தில் சிக்கிய நடிகை
போதை விருந்தில் சிக்கிய நடிகை
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடித்த நடிகை போதை விருந்தில் சிக்கியுள்ளார்.
போதை விருந்தில் சிக்கிய விஜய் சேதுபதி பட நடிகை
நிகாரிகா
முதலில் அந்த ஓட்டலின் இமெயிலுக்கு தகவல் அனுப்ப வேண்டும். ஓட்டல் தரப்பிலிருந்து அனுப்பப்படும் ஓ.டி.பி மூலம் எந்த மேஜை ஒதுக்கப்பட்டுள்ளது என
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் தனியார் 5 நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் போதை விருந்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள்
அவர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவார்கள். அந்த எஸ்.எம்.எஸ்-ஐ காட்டினால் மட்டுமே செக்யூரிட்டிகள் ஓட்டலுக்குள் அனுமதிப்பார்கள்.
இந்த ஓட்டலில் நள்ளிரவு ஒரு மணி வரை மது விருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை ஓட்டலில் போதை விருந்து நடைபெறுவதாக
ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் ஜோயல் டேவிஷ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ஓட்டலுக்குள் அதிரடியாக புகுந்தனர்.
அங்கு போதை விருந்தில் கலந்து கொண்ட 148 பேரை சுற்றி வளைத்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஆந்திரா மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, தம்பி நாக பாபுவின் மகள் நிகாரிகா, திரைப்பட பாடகர் ராகுல், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ரேணுகா சவுத்ரி
மகள், ஆந்திரா முன்னாள் டி.ஜி.பி மகள் மற்றும் முன்னாள் எம்.பியின் மகன் என விஐபியின் பிள்ளைகள் கலந்து கொண்டது தெரியவந்தது.
இவர்களுக்கு அந்த ஓட்டலில் பிரவுன் சுகர், கொகைன் உள்ளிட்ட போதைப் பொருள் சப்ளை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஓட்டலில்
வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்வதற்காக 5 பாக்கெட்டுகளில் வைத்திருந்த 12 கிராம் எடையுள்ள கொகைன் பறிமுதல் செய்தனர்.
நிகாரிகாவிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் பின்னர் அவரை விடுவித்தனர். விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக்கின் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நிகாரிகா நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நிகாரிகாவின் தந்தை வெளியிட்டுள்ள விடியோவில் என் மகள் அந்த
விடுதியில் இருந்தது உண்மை. ஆனால் அவர் எந்த தவறும் செய்யவில்லை. இதனால் வதந்திகளை நம்பாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்
பீஸ்ட் படத்தின் டிரைலர்.. தியேட்டரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்
பீஸ்ட் படத்தின் டிரைலர்.. தியேட்டரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்ட தியேட்டரை ரசிகர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.
பீஸ்ட் படத்தின் டிரைலர்.. தியேட்டரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்
பீஸ்ட் – விஜய்
மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகி
ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தது. இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். இந்தப் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பீஸ்ட் படத்தின் டிரைலரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டுள்ளனர். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்தது. பீஸ்ட்
திரைப்படத்தின் டிரைலர் நேற்று சில திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்ட பொழுது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கைகள் மேல் ஏறி அவர்களுடைய சந்தோஷத்தை
வெளிப்படுத்தினர். அப்போது தியேட்டர்களில் இருக்கைகளை
ரசிகர்கள் சிலர் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகைக்கு பாலியல் தொல்லை
நடிகைக்கு பாலியல் தொல்லை
நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வில்லன் நடிகர் கணேஷ் ஆச்சார்யா வழக்கின் மீது மும்பை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
நடிகைக்கு செக்ஸ் தொல்லை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
கணேஷ் ஆச்சார்யா
இந்தி திரையுலகில் பிரபல நடன இயக்குனரான கணேஷ் ஆச்சார்யா, தமிழில் நடிகர் ஜீவாவின் ரவுத்திரம் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். சமீபத்தில் வெளியாகி
ஹிட் அடித்த ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்திருந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணேஷ் ஆச்சார்யா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடுமைப்படுத்துவதாக அவரது நடனக்குழுவில் பணிபுரிந்து
வந்த 35 வயது நடன நடிகை மும்பை அம்போலி போலீஸ் நிலையத்திலும், பெண்கள் கமிஷனிலும் புகார் கொடுத்திருந்தார். அதன்பின் புகாரின் அடிப்படையில் கணேஷ்
ஆச்சார்யா மீது மும்பை போலீசார் 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கணேஷ் ஆச்சார்யாவின் மீது
பதியப்பட்ட இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையை அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மும்பை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
போக்குவரத்து விதிமீறிய நடிகர் – தண்டம் விதித்த பொலிஸ்
போக்குவரத்து விதிமீறிய நடிகர் – தண்டம் விதித்த பொலிஸ்
பிரபல நடிகர் ஒருவர் போக்குவரத்து விதிமீறியதாக போலீசார் அவருக்கு அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல நடிகர் ஒருவர் போக்குவரத்து விதிமீறியதாக போலீசார் அவருக்கு அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விதிமீறிய நடிகர்…. அபராதம் விதித்த போலீசார்
மனோஜ் மஞ்சு
ஐதராபாத்தில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். கார்
கண்ணாடியில் ஒட்டப்பட்டு உள்ள கருப்பு பிலிம்களையும் நீக்கி வருகிறார்கள். நடிகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வாகனங்களும் இதில் தப்புவது இல்லை.
சமீபத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் கார் வாகன சோதனையில் சிக்கியது. அந்த காரில் கருப்பு பிலிம் இருந்ததால் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுபோல் நடிகர்கள் அல்லு அர்ஜுன், கல்யாண்ராம் ஆகியோரின் கார்களிலும் கருப்பு பிலிம் இருந்ததால் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த
நிலையில் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சுவும் போக்குவரத்து விதிமீறலில் சிக்கி உள்ளார்.
மனோஜ் மஞ்சு காரில் வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரது கார் கண்ணாடியில் விதிகளை மீறி கருப்பு பிலிம் ஒட்டப்பட்டு இருந்தது.
இதையடுத்து மனோஜ் மஞ்சுவுக்கு போலீசார் ரூ.700
அபராதம் விதித்தனர். கருப்பு பிலிமையும் கிழித்து எறிந்தார்கள்.
அரசியல் விளையாட்டு நமக்கு செட்டாகாது… மாஸ் காட்டும் பீஸ்ட் டிரைலர்
அரசியல் விளையாட்டு நமக்கு செட்டாகாது… மாஸ் காட்டும் பீஸ்ட் டிரைலர்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அரசியல் விளையாட்டு நமக்கு செட்டாகாது… மாஸ் காட்டும் பீஸ்ட் டிரைலர்
விஜய்
‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா
ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து
அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தது. இப்படத்தில்
இடம்பெறும் இரண்டு பாடல்களை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். இந்தப் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் டிரைலரை படக்குழுவினர் என்று வெளியிட்டுள்ளனர். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த டிரைலர்
தற்போது ரசிகர்களை கவர்ந்து வந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வசூல் சாதனை படைக்கும் ஆர்.ஆர்.ஆர்
வசூல் சாதனை படைக்கும் ஆர்.ஆர்.ஆர்
ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆர்.ஆர்.ஆர் படம் புதிய வசூல் சாதனை படைத்துள்ளது.
தொடர் வசூல் சாதனை படைக்கும் ஆர்.ஆர்.ஆர்.
ஆர்.ஆர்.ஆர்.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ்,
மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வருகிறது.
இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில்
ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், ஆர்.ஆர்.ஆர். புதிய வசூல் சாதனை படைத்துள்ளது.
அதன்படி, ஆர்.ஆர்.ஆர். வெளியான ஒரு வாரத்தில் ரூ.710 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
இருட்டு அறையில் முரட்டு குத்து- நடிகைக்கு திருமணம்
இருட்டு அறையில் முரட்டு குத்து- நடிகைக்கு திருமணம்
இருட்டு அறைக்குள் முரட்டு குத்து, ஸோம்பி படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த் அவருடைய திருமணம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
யாஷிகாவிற்கு திருமணம்.. குழப்பத்தில் ரசிகர்கள்
யாஷிகா ஆனந்த்
2016-ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த். சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியா நடித்ததன் மூலம்
மிகவும் பிரபலமானார். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்டு படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம்
அடைந்த அவர், பல மாதங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது, ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அவ்வப்போது
ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி வருகிறார். இந்நிலையில், அவருடைய திருமணம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நான் திருமணம் செய்து கொள்வதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் அம்மாவும் அப்பாவும்
அதற்கு சம்மதித்துள்ளனர். இது செட்டில் ஆகும் நேரம். இருப்பினும், திரைப்படங்களில் இருந்து விலகப் போவதில்லை. எனக்கு சினிமா பிடிக்கும். எதுவாக இருந்தாலும் நான்
உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன். இது நிச்சயிக்கப்பட்ட திருமணம்.
லவ் எல்லாம் செட் ஆகாது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
தனது முதலிரவு நாளை எண்ணி அம்மணி குஷியில் உறைந்துள்ளார் அன்று தனது நேர்பட போகும் ஆசை கனவுகளை அரைத்து ஊற்றும் மகிழ்ச்சியில் அம்மணி உறைந்துள்ளார்
இன்று தான் தனக்கு சட்டப்படி அந்த நாள் என்பதால் அம்மணி பெரும் மகிழ்ச்சியில் உறைந்துள்ளாராம்
காதல் கணவர் இவருக்கு செம பூசை செய்வாரா என்பது சந்தேகமே என ரசிகர்கள் கிண்டல் புரிந்து வருகின்றனர் முதலிரவு மகிழ்ச்சியில் உறைந்துள்ள இந்த நடிகைக்கு ஏமாற்றம் மிஞ்சுமா ..? என்பதே ரசிகர்கள் கருத்து
உங்கள மாதிரி பீஸ்ட் டிரைலருக்கு வெயிட்டிங் நண்பா
உங்கள மாதிரி பீஸ்ட் டிரைலருக்கு வெயிட்டிங் நண்பா
நெல்சன் இயக்கி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் டிரைலருக்கு காத்திருக்கிறோம் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் படக்குழுவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
நாங்களும் உங்கள மாதிரி பீஸ்ட் டிரைலருக்கு வெயிட்டிங் நண்பா.. வைரலாகும் புகைப்படம்
பீஸ்ட் – விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக திகழும் விஜய் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த
திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் .இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவுள்ளது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகி
ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தது. இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது.
‘பீஸ்ட்’ படத்தின் டிரைலர் வருகிற ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது ஒரு பதிவின் மூலம் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த பதிவில் ”நாங்களும்
உங்கள மாதிரி பீஸ்ட் டிரைலர்க்கு வெயிட்டிங் நண்பா” என்று பதிவிட்டு விஜய் மற்றும் படக்குழு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
சாட்சியை கலைத்ததாக புகார்.. நடிகை காவ்யா மாதவனிடன் விசாரணை
சாட்சியை கலைத்ததாக புகார்.. நடிகை காவ்யா மாதவனிடன் விசாரணை
நடிகை பாலியல் பலாத்கார சம்பவத்தில் சாட்சியை கலைத்ததாக புகாரில் நடிகை காவ்யா மாதவனிடமும் விசாரணை நடத்த கேரள குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளது.
சாட்சியை கலைத்ததாக புகார்.. நடிகை காவ்யா மாதவனிடன் விசாரணை
காவ்யா மாதவன்
கேரளாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஓடும் காரில் பிரபல நடிகை பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த வழக்கில் திலீப் சாட்சியங்களை அழிக்க முயன்றதாகவும், விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாகவும் புகார் எழுந்தது.
கடந்த 2 நாட்களாக நடிகர் திலீப்பிடம் சுமார் 16 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நடிகை தாக்கப்பட்ட வழக்கில் திலீப்பின் 2-வது மனைவியும், பிரபல
நடிகையுமான காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் ஆலப்புழாவை சேர்ந்த ஒருவர் திடீரென பல்டி அடித்தார். இதில் காவ்யா மாதவனுக்கு முக்கிய பங்கு இருப்பதாக
போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக நடிகை காவ்யா மாதவனிடமும் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
விரைவில் அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
ஆணுறை வாங்குறதுல தவறு ஒன்றுமில்லை.- கமல் மகள்
ஆணுறை வாங்குறதுல தவறு ஒன்றுமில்லை.- கமல் மகள்
என்னால் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு தனியாக சென்று ஆணுறை வாங்க முடியும். ஆணுறை வாங்குறதுல தவறு ஒன்றுமில்லை.
பெண்கள் கொண்டம் வாங்கினால் என்ன தப்பு எனக் கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை அக்ஷரா ஹாசன்.
அறிமுக இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு”. அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை அக்ஷரா ஹாசன் நடித்துள்ளார்.
பெண்களின் பதின்பருவ ஆசைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ஒரு சிலரிடம் ஆதரவையும், பலரிடம் எதிர்ப்பையும் பெற்று வருகிறது. இப்படத்தில்
ஹீரோயினாக நடித்திருக்கும் அக்ஷரா ஹாசன் ஒரு காட்சியில் கடைக்கு சென்று காண்டம் வாங்குவார். இதையடுத்து அவர் கலந்துக் கொண்ட நேர்க்காணல் ஒன்றில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அக்ஷரா ஹாசன், ”இங்க பாலியல் உணர்வை பெண்கள் கன்ட்ரோல் செய்து கொள்ள வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். அது முடியாது,
நாங்களும் மனிதர்கள் தான். என்னால் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு தனியாக சென்று ஆணுறை வாங்க முடியும். ஆணுறை வாங்குறதுல தவறு ஒன்றுமில்லை. நீங்கள் பாதுகாப்பாக உடலுறவு செய்கிறீர்கள்.
ஒழுங்காக உடலுறவு நடக்கிறது. அதில் என்ன பிரச்னை?” எனக் கேட்டுள்ளார்.
விஜய்யுடன் இணையும் பிரபல இந்தி நடிகை
விஜய்யுடன் இணையும் பிரபல இந்தி நடிகை
பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் தளபதி 66 படத்தில் பிரபல இந்தி நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யுடன் இணையும் பிரபல இந்தி நடிகை
கிரித்தி சனோன்
விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விறுவிறுப்பாக இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. பீஸ்ட்
திரைப்படம் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள நடிகை குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.இப்படத்தில்
விஜய்க்கு ஜோடியாக ‘ராஷ்மிகா மந்தனா’ நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளிவந்தது. பிறகு தமன்னா நடிப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகை ‘கிரித்தி சனோன்’ கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இவர் இதற்குமுன் இந்தியில்
வெளியான ஹவுஸ்ஃபுல்4, பரேலி கி பர்ஃபி,
போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
விமானத்தில் இருந்து குதித்த பிரபல நடிகை
விமானத்தில் இருந்து குதித்த பிரபல நடிகை
தமிழ் தெலுங்கு என படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை விமானத்தில் இருந்து குதித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விமானத்தில் இருந்து குதித்த பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ
ஈஷா ரெப்பா
தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தமிழில் ‘ஓய்’ என்கிற படத்தில் ஹீரோயினாக மாறியவர் ஈஷா ரெப்பா. தெலுங்கு திரையுலகின் முன்னணி
நடிகையாக வலம் வரும் இவர் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவரது கை வசம் இரண்டு தமிழ் படங்களும் உள்ளது. கிடைத்த இடத்தை விட கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கும் ஈஷா ரெப்பா, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி
புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
நடிகை ஈஷா ரெப்பா தனது கோடை விடுமுறையை துபாயில் கொண்டாடி வருகிறார். அங்கே அவர் விமானத்தில் இருந்து குதித்து செய்த ஸ்கை
டைவிங் சாகச வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பல பெண்களுடன் உறவு -சிக்கிய நடிகர் மன்னிப்பு கேட்டார்
பல பெண்களுடன் உறவு -சிக்கிய நடிகர் மன்னிப்பு கேட்டார்
மலையாள நடிகர் விநாயகனின் சமீபத்திய சர்ச்சைக்குறிய கருத்திற்கு மன்னிப்பு கேட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட மலையாள நடிகர் விநாயகன்
விநாயகன்
மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, மரியான், சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில்
நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விநாயகன் கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் இவர் பேசியது சர்ச்சையை கிளப்பியது.
அப்போது அவர் பேசியது, கேரளாவில் மீ டூ பற்றி பலரும் பேசி வருகிறார்கள். அது என்னவென்று எனக்கு புரியவில்லை. ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி உறவு வைத்து
கொள்வது தான் மீ டூ வா? எனவும் தெரியவில்லை. ஒரு பெண்ணை பார்க்கும் போது அந்த பெண்ணை எனக்கு பிடித்திருந்தால், நான் அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று
என்னுடன் உறவு கொள்ள விருப்பமா? என்று கேட்பேன். அவர் விருப்பம் தெரிவித்தால் அவருடன் உறவு வைத்து கொள்வேன். இப்படி நான் பலரிடம் உறவு வைத்துள்ளேன் என்றார்.
விநாயகனின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை பார்வதி உள்ளிட்ட நடிகைகளும், பெண்கள் அமைப்பினரும் கண்டித்தனர். எதிர்ப்பு வலுத்ததால்
விநாயகன் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து முகநூலில் வெளியிட்ட பதிவில், ”நான் பெண்களுக்கு எதிராக அதன் தீவிரத்தை அறியாமல் சில கருத்துகளை தெரிவித்து விட்டேன்.
இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.
மன வலியோடு பிரிந்தோம் – சோனியா அகர்வால்
மன வலியோடு பிரிந்தோம் – சோனியா அகர்வால்
கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை சோனியா அகர்வால் மன வலியோடு பிரிந்தோம் என்று கூறியிருக்கிறார்.
சோனியா அகர்வால்
செல்வராகவன் – சோனியா அகர்வால்
தமிழில் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். தொடர்ந்து கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ
காலனி, ஒரு கல்லூரியின் கதை, திருட்டு பயலே, வானம், சதுரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
சோனியா அகர்வாலுக்கும், இயக்குனர் செல்வராகவனுக்கும் காதல் மலர்ந்து 2006-ல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2010-ல் இருவருக்கும் கருத்து வேறுபாடு
ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். இத்தனை வருடமும் விவாகரத்து குறித்து கருத்து சொல்லாமல் இருந்த சோனியா அகர்வால் தற்போது முதல் தடவையாக செல்வராகவனை பிரிந்த காரணம் பற்றி பேசி இருக்கிறார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், “செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றியபோது அவரது கடின உழைப்பு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. என்னையும் அவருக்கு
பிடித்தது. இதனால் காதலிக்க ஆரம்பித்தோம். பின்னர் திருமணமும் செய்து கொண்டோம்.
அதன்பிறகு சில விஷயங்களில் உடன்படாத மனநிலை உள்ளிட்ட சில காரணங்களால் இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்தோம். திருமணம் செய்து கொள்ளும்போது மகிழ்ச்சியாக இருந்தோம்.
ஆனால் விவாகரத்து செய்யும்போது மன வலியோடு பிரிந்தோம்’’ என்றார்.
வைரலாகும் எமி ஜாக்சன் உடற்பயிற்சி வீடியோ
வைரலாகும் எமி ஜாக்சன் உடற்பயிற்சி வீடியோ
பிரபல நடிகையாக இருக்கும் எமி ஜாக்சன், உடற்பயிற்சி செய்யும் வீடியோவிற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
வைரலாகும் எமி ஜாக்சன் உடற்பயிற்சி வீடியோ
எமி ஜாக்சன்
தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.
எமி ஜாக்சன்
எமி ஜாக்சன்
ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தை பெற்றுக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வார். குழந்தை பெற்ற பிறகு லேசாக கூடிய உடல் எடையை முற்றிலும் குறைத்து பழைய தோற்றத்திற்கு மாறி இருந்தார். இந்நிலையில் அவர் உடற்பயிற்சி
செய்யும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்
நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்
பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்.
நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்
மீரா மிதுன்
8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா மிதுன். இவர் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீரா மிதுன்
மீரா மிதுன்
மீரா மிதுனை கைது செய்து வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவுக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






