Tag: கைது
ஆயுதங்களுடன் 7 பேர் கைது- தொடரும் விசாரணை
ஆயுதங்களுடன் 7 பேர் கைது- தொடரும் விசாரணை
ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த காலப்பகுதியில், களுத்துறை சென்றல் சந்தியில், களுத்துறை விசேட அதிரடிப் படை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட வீதிச் சோதனை
நடவடிக்கைகளின்போது. சட்டவிரோதமான முறையில் முச்சக்கர வண்டி மற்றும் கார் ஒன்றில் கொண்டுச்செல்லப்பட்ட ஆயுதங்கள் சிலவற்றுடன் எழுவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, நவீன ரக சொகுசு கார் ஒன்றையும் முச்சக்கர வண்டி ஒன்றையும் நான்கு வாள்கள், ஆறு அரிவாள்கள், ஒரு கைக்குண்டு, இரு டீ-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள், இரு வெற்று டீ-56 ரக
துப்பாக்கி தோட்டங்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை கைப்பற்றிய பொலிஸார், 22 மற்றும் 36 வயதுக்கு
உட்பட்ட பயாகலை பகுதியைச் சேர்ந்த மூவரையும், களுத்துறை பகுதியைச் சேர்ந்த இருவரையும், மத்துகமைப் பகுதியைச் சேர்ந்த இருவரையும்; கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை, களுத்துறை நீதிமன்றத்தின் பதில் நீதவான் ரவி டொமிங்கோ முன்னிலையில்
ஆர்படுத்தியபோது, மூவரை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை
மேற்கொள்ளவும், ஏனைய நால்வரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 150 பேர் கைது-403 வாகனங்கள் பறிமுதல்
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 150 பேர் கைது-403 வாகனங்கள் பறிமுதல்
கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 150 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாகப் பிரதிப் பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று (06) 21 வாகனங்களைப் பொலிஸார் கைபற்றியிருப்பதாகவும்,
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 2,600 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதோடு,
403 வாகனங்களையும் பொலிஸார் இதுவரையில் கைபற்றியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 98 பேர் கைது
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 98 பேர் கைது
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 98 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (29) காலை 06 மணிமுதல் இன்று (30) அதிகாலை 05
மணிவரையான காலப்பகுதியில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்களில் 42 பேர் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா வைத்திருந்த 06 பேர், சட்டவிரோத மதுபானங்களுடன் 37 பேர், கோடா வைத்திருந்த 06 பேர் மற்றும் ஏனைய
குற்றச்சாட்டுகளில் 07 பேர் கைதுசெய்யப்பட்டள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
போலி பாஸ்போர்ட்டில் தப்ப முயன்ற அமெரிக்க தமிழர் கைது
போலி பாஸ்போர்ட்டில் தப்ப முயன்ற அமெரிக்க தமிழர் கைது
போலி பாஸ்போர்ட்டில் அமெரிக்காவை விட்டு தப்ப முயன்ற அமெரிக்க தமிழரை அதிகாரிகள் கைது செய்தனர்.
போலி பாஸ்போர்ட்டில் தப்ப முயன்ற அமெரிக்க தமிழர் கைது
கைது
அமெரிக்காவில் வசித்து வரும் தமிழர் துரைகந்தன் முருகன் (வயது 41). சிறுமியை
பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக அவர் மீது நியூ ஜெர்சி மாகாணத்தில் வழக்கு இருக்கிறது.
இதற்கிடையே, அமெரிக்காவை விட்டு தப்புவதற்காக, சிகாகோ சர்வதேச விமான நிலையத்துக்கு முருகன் வந்தார்.
வழக்கமான விசாரணைக்காக, எல்விஸ் டயாஸ் என்பவர் பெயரிலான இந்திய பாஸ்போர்ட்டையும், பயண அனுமதி
அட்டையையும் அதிகாரிகளிடம் அளித்தார். ஆனால், அவரது உடைமைகளை பரிசோதித்தபோது, முருகன் பெயருக்குரிய ஆவணங்கள் இருந்தன.
உடற்கூறு பரிசோதனையின்போது, அவர் பெயரில் பாலியல் வழக்கு நிலுவையில் இருப்பதை காட்டியது.
இதையடுத்து, அவரிடம் விசாரித்தபோது, தன் பெயர் முருகன் என்றும்,
உடல்நலமின்றி இருக்கும் தனது தந்தையை பார்ப்பதற்காக, நண்பரின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அமெரிக்காவை விட்டு
செல்ல முயன்றதாக ஒப்புக்கொண்டார். அவர் கைது செய்யப்பட்டு, நியூ ஜெர்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வவுனியாவில் 22 பேர் கைது
வவுனியா பொலிஸார் நேற்று (02) மாலை மேற்கொண்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 3 மணிநேரத்தில் 22 நபர்களை கைது செய்துள்ளனர்.
“குற்றச்செயல்கள் அற்ற வவுனியாவை உறுவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் வவுனியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி
பீ.ஆர்.மானவடுவின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைய வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று (02) மாலை மேற்கொள்ளப்பட்ட மூன்று மணிநேர விசேட நடவடிக்கையின் போது பெண்களுடன் பகிடிவதை குற்றச்சாட்டில் ஒருவரும், வழிப்பறி மற்றும் கொள்ளை குற்றச்சாட்டில் இருவரும்,
கேரளா கஞ்சாவுடன் நால்வரும், கரோயினுடன் ஒருவரும், நீதிமன்ற பிடியானை உத்தரவில் இருவரும், மதுபோதையில் வாகனம்
செலுத்திய குற்றச்சாட்டில் இருவரும் , சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு பேர், பொதுமக்கள் நடமாடும் பகுதியல் மதுபானம் அருந்திய
குற்றச்சாட்டில் நால்வரும் என 22 நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 நபர்களும் வவுனியா பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் அவர்களிடம் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களை வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்றிலையில்
ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
துப்பாக்கிகளுடன் இருவர் திடீர் கைது
துப்பாக்கிகளுடன் இருவர் திடீர் கைது
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் இருவர்
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா சின்னபன்டிவிரிச்சான் பகுதியில் வைத்து ஒருவரும்,
உடவலவை பகுதியில் வைத்து ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சின்னபன்டிவிரிச்சான் பகுதியில் இன்று (19) அதிகாலை கைதானவர் 31 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உடவலவை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவர்
கல்பொத்தயாய பகுதியை சேர்ந்த 48 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் மன்னார் மற்றும் வெல்லவாய நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
பண மோசடியில் ஈடுபட்ட ஐந்து சந்தேக நபர்கள் கைது
பண மோசடியில் ஈடுபட்ட ஐந்து சந்தேக நபர்கள் கைது
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் மோசடி செய்த சந்தேக நபர்கள் ஐந்து
பேரை நேற்று முன்தினம் (ஜூலை 26) கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சலுகை வட்டியில் கடன் வழங்குவதாக கூறி தொலைபேசி மூலம் வங்கிக் கணக்கின் விபரங்களை பெற்றுக்கொண்ட சந்தேகநபர்கள்
வங்கிக் கணக்கிலிருந்து 500,000 ரூபாவை மோசடி செய்ததாக பெண் ஒருவரினால் கிருலப்பனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் பிடபெத்த, வெல்லம்பிட்டிய மற்றும் நாரஹேன்பிட்டிய ஆகிய
பிரதேசங்களை சேர்ந்த 30, 39 மற்றும் 46 வயதுடைய சந்தேகநபர்கள் போலியான ஆவணங்கள் மற்றும் போலி சாரதி அனுமதிப் பத்திரங்களை தயாரித்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, அவர்கள் பயன்படுத்திய மடிக்கணினிகள், வங்கிஅட்டைகள், லேமிண்டிங் மெஷின், ஓட்டுனர்
அனுமதிப்பத்திரம் அச்சிடும் அட்டைகள், போலி ஓட்டுனர் அனுமதிப்பத்திரம், ரப்பர் ஸ்டாம்ப், சர்வதேச ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் என்பன கைப்பற்றப்பட்டன.
சந்தேகநபர்கள் நேற்று கொழும்பு புதுக்கடை இலக்கம் 3 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். சம்பவம் தொடர்பான
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் துறையால் 364 பேர் அதிரடி கைது
காவல் துறையால் 364 பேர் அதிரடி கைது
இலங்கை மேல்மாகாணத்தில் கடந்த இருபத்தி நமக்கு
மணித்தியாலத்தில் போலீசார் நடத்திய திடீர் முற்றுகை சோதனையின்
பொழுது 364 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்,கைதானவர்களில் சிலர்
பல்வேறு பட்ட குற்றங்கள் புரிந்து தப்பி சென்றவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
திருமலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 47 பேர் கைது
திருமலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 47 பேர் கைது
திருகோணமலைக்கு வெளியே உள்ள ஃபவுல்துடுவ கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 47 பேர் கைது கடற்படையால் செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழு, கடந்த 17 ஆம் திகதி திருகோணமலைக்கு வெளியே
உள்ள ஃபவுல்துடுவ கடலில் மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளைப்
பயன்படுத்தி மீன்பிடிக்கச் சென்ற 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 8 டிங்கி படகுகளும் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
படகுகளில் இருந்து 557 கிலோகிராம் மீன் மற்றும் பல மீன்பிடி கியர்களையும் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
சந்தேக நபர்கள் 28 முதல் 56 வயதுக்குட்பட்ட கின்னியாவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் டிங்கிகள், தடைசெய்யப்பட்ட வலைகள், மீன் தொகை மற்றும் பிற மீன்பிடி சாதனங்கள் மேலதிக விசாரணைகளுக்காக
திருகோணமலை மீன்வளத்துறை உதவி இயக்குநர்க்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
தப்பி ஓடிய போலீஸ் அதிகாரி சரண்
தப்பி ஓடிய போலீஸ் அதிகாரி சரண்
போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருப்பதாக
குற்றம் சுமத்தப்படும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின்
பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார இன்று (07) கடவத்த பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்கத்திற்கு ஆஜர்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
12 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது
12 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது
ஹோமாகம, பிட்டிபன பகுதியில் வைத்து பாதாள உலகு குழு உறுப்பினரான தற்போது சிறையில் உள்ள ´ககன´ எனும் நபரின்
உதவியாளர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கிகள் 12 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் லஞ்சம் வாங்கிய ஐவர் கைது
கொழும்பில் லஞ்சம் வாங்கிய ஐவர் கைது
கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பகுதியில் கப்பம்கோரல் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த ஐவரை கொழும்பு
குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அனைவரும் சட்ட நடவடிக்கைகளுக்காக நேற்று (26) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அனைவரும் கொழும்பு மனிங் சந்தைக்கு மரக்கறிகளை ஏற்றிச்செல்லும் லொறிகளிடம் இருந்து கப்பம் கோரிய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்
புறக்கோட்டையில் கப்பம் பெற்ற 5 பேர் கைது
புறக்கோட்டையில் கப்பம் பெற்ற 5 பேர் கைது
கொழும்பு குற்றவியல் பிரிவின் அதிகாரிகளால் புறக்கோட்டையில் கப்பம் பெற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புறக்கோட்டை மெனிங் சந்தையின் பின்னால் பெஸ்டியன் மாவத்தை மற்றும் ஓல்கோட் மாவத்தையில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த மரக்கறி லொறிகளில் குறித்த குழுவினர் கப்பம் பெற்றுள்ளனர்.
நேற்று (25) காலை 8.30 மணிக்கு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24, 36, 38, 55, 60 ஆகிய வயதுடைய கிரேன்பாஸ் வெல்லம்பிட்டி மற்றும் கஹவத்தை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை இல-02 நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் கைது
துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் கைது
யக்கலமுல்ல, வாத்தஹென பகுதியை சேர்ந்த 33 மற்றும் 39 வயதுடைய இரு சந்தேக நபர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு
குறுந்தூர துப்பாக்கிகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட இருவரும் சட்ட நடவடிக்கைகளுக்காக காலி நீதவான் நீதி மன்றத்தில் நேற்று (ஜூன் 23)
ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
யக்கலமுல்ல பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட
தேடுதல் நடவடிக்கைகளின் பிரகாரம் நேற்று முன்தினம் மாலை இவ்
இரு சந்தேக நபர்களும் துப்பாக்கிகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யக்கலமுல்ல பொலிஸார் குறித்த சந்தேக நபர்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளமட்டை பண மோசடி செய்த 4 வெளிநாட்டவர்கள் கைது
கள்ளமட்டை பண மோசடி செய்த 4 வெளிநாட்டவர்கள் கைது
இணையதளத்தின் ஊடாக பல்வேறு நபர்களிடம் பண மோசடி செய்த 4 வெளிநாட்டவர்கள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்கு அருகில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீட்டிலுப்பின் மூலம் பரிசு வென்றுள்ளதாக தெரிவித்து குறித்த நபர்கள் இணையதளத்தின் ஊடாக பணம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நைஜீரியா பிரஜைகள் மூவர் மற்றும் உகண்டா நாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 15 கடன் அட்டைகளை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
காவல்துறை சுற்றிவளைப்பில் 25,912 பேர் கைது
காவல்துறை சுற்றிவளைப்பில் 25,912 பேர் கைது
கடந்த 2 வார காலப்பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு
மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் 25,912 கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 53 விடுதலை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 53 விடுதலை
நீதிமன்ற உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கொள்ளுபிட்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்
கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் 53 உறுப்பினர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதவானினால் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசா இன்றி தங்கி இருந்த ஆறு இந்தியர்கள் கைது
விசா இன்றி தங்கி இருந்த ஆறு இந்தியர்கள் கைது
இலங்கைக்கு உல்லாச பாயணிகளாக வருகை தந்து விசா இயன்றி தங்கி இருந்த ஆறு இந்தியர்கள்
காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
துப்பாக்கியுடன் இளம் பெண் கைது – விசாரணைகள் தீவிரம்
துப்பாக்கியுடன் இளம் பெண் கைது – விசாரணைகள் தீவிரம்
இலங்கை சிலாபத்துறை பகுதியில் இளம் பெண் ஒருவர் துப்பாக்கி
ஒன்றை மாறுது வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்ய பட்டுளளார்
அவரிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்ய பட்டுள்ளது ,தொடர்ந்து இதுகுறித்த விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் – 66 ஆயிரம் பேர் கைது
ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் – 66 ஆயிரம் பேர் கைது
கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திககி மாலை 6 .00 மணி தொடக்கம் இன்று காலை 4.00 (2020.05.30) மணி வரையிலான காலப்பகுதியில்
ஊரடங்கு சட்டத்தை மீறிய 66,835 கைது செய்யபட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இக்காலப்பகுதிக்குள் கைப்பற்றப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 18,831
23,307 பேருக்கெதிராக நேற்று வரையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வழக்கு தாக்கல் செய்யப்பட்டதற்கு அமைவாக நீதி மன்றத்தினால் 9,494 பேருக்கு தண்டணை விதிக்கப்பட்டதாக தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.






