Tag: குளங்கள்
வவுனியாவில் 15 குளங்கள் உடைப்பு
வவுனியாவில் 15 குளங்கள் உடைப்பு
வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்வதுடன், 15 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களிற்கான நீர் வரத்து அதிகரித்தமையினால்,
குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து 93 குளங்கள் வான் பாய்கின்றன. மேலும் பல குளங்கள் வான் பாயும் கட்டத்தை அடைந்துள்ளன.
வவுனியாவில் 15 குளங்கள் உடைப்பு
அத்துடன், வவுனியா மாவட்டத்தில் 15 குளங்கள் சிறு உடைப்பெடுத்த நிலையில் அவை தற்காலிகமாக புனரமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வான் பாய்வதனை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருவதுடன் நீர்நிலைகளில் மீன்பிடித்தும் வருகின்றமையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
- வீடுகளுக்குள் நுழைந்த புலி கண்டியில் பதட்டம்
- எல் நினோ அச்சுறுத்தல் ஆபத்தில் சிக்கிய இலங்கை
- இளம் தலைமுறையினரால் மட்டுமே தேசம் முன்னேற முடியும் பிரதமர்
- குளவி தாக்குதலில் ஒருவர் பலி ஐவர் காயம்
- இன்று பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை
- சாலை அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) மோசடி
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது
- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை
- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை
5,000 குளங்கள் அபிவிருத்தி
5,000 குளங்கள் அபிவிருத்தி
ஜனாதிபதி கோட்டாபய ராஐபக்ஷவின் எண்ணக்கருவில் 5000 குளங்களை புனரமைக்கும் செயல்திட்டத்தினை நாடு பூராகவும் நடைமுறைப்படுத்துவதற்கான முதலாவது கூட்டமும் விவசாய
அபிவிருத்திகுழுவின் விசேட கூட்டமும் நேற்று (11) பிற்பகல் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
சுபீட்சத்தை நோக்கிய கிராமிய பொருளாதாரத்தினை அபிவிருத்தியூடாக நஞ்சற்ற உணவு உற்பத்தியினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஐந்து வருடங்களுக்கு மேலாக
அபிவிருத்திசெய்யப்படாத குளங்கள் மற்றும் வாய்க்கால்கள், தூர்ந்து போன குளங்கள், அணைக்கட்டுகள் போன்றவற்றை அபிவிருத்திசெய்யும் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 17 கமநல சேவை நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஒவ்வரு கமநல
சேவை நிலைய பிரிவுகளிலும் மூன்று முதல் ஐந்து குளங்கள் தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி இலங்கை முழுவதும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவ்வேலைத்திட்டமானது ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது. மாறாக விவசாய அமைப்பினர் பொது மக்கள் நலன்விரும்பிகள் மாணவர்கள் தொண்டர்கள் மூலமாகவே
இந்த வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன். மத்திய மாகாண அரசாங்கத்தின் கீழ்வருகின்ற 87குளங்கள் மட்டக்களப்பில் அவிவிருத்தி செய்யப்படவுள்ளன.

















