மனைவி
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

மனைவி

மனைவி

காகம் போல தினம் கரைவாள்
கடமை சோரா தினம் காய்வாள்
இல்லா நிலையில் இல்லம் வாடாள்
இருப்பதை வைத்தே இயக்கி போவாள்

அன்பு அதிகம் கொள்வாள்
அதனால் அதிகம் எரிவாள்
பண்பு தினம் பொலிவால்
பாயிலே தினம் ஓய்வாள்

பத்து மாதம் சுமப்பதுவும்
பணிவிடைகள் தினம் செய்வதும்
சத்தி வாய் வயிறோடும்
சளைக்கா வீடு உழைப்பதுவும்

எண்ணையில் மனம் வியக்கிறது
எப்படி இவளால் முடிகிறது
பாவம் செய்த ஓர் பிறப்பு
பாவை இவளின் பொறுப்பு

உணவு கொஞ்சம் இருந்தாலும்
ஊட்டி பிள்ளை வளர்ப்பதுவும்
பட்டினி கிடப்பதை மறைப்பதுவும்
பழகி போன வாழ்வாகும்

போதையில் கணவன் அடிப்பதுவும்
பொல்லாமை நெஞ்சு வீசுவதும்
எல்லாம் சகித்து வாழ்வதும்
எப்படி இவளால் முடிகிறது

பெண்ணாய் பிறந்தவர் பாவமடா
பெரும் துயர் கடக்கிறார் நாளுமடா
அன்பை கொஞ்சம் காட்டுங்கடா
அறத்தை நாட்டி வாழுங்கடா ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 06-04-2024

என்னை கூட்டி போ
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை கூட்டி போ

என்னை கூட்டி போ

சின்ன சின்ன ஆசை வந்து
சீக்கிரம் நெஞ்சில் முட்டுறதே
கொஞ்சி பேச நினைக்கையிலே
கோபம் கொண்டு துரத்துறியே

வஞ்சி உந்தன் பேரழகை
வழியில் நிண்டு தரிசிக்கிறேன்
கொஞ்சம் இரக்கம் காட்டாயா
கொள்கை கொஞ்சம் மாற்றாயா

அழைத்தால் பேச மறுக்கிறாய்
அருகில் வந்தால் முறைக்கிறாய்
என்ன செய்தால் இரங்கிடுவாய்
எடுத்து கொஞ்சம் சொல்லாயா

ஆண்டு ஒன்று கழிகையில
அகவை ஒன்று கழிகிறதே
பொல்லு ஊன்றும் காலமதில்
பொக்கை வாயு வேண்டாமே

வீடு வந்த வேளையில
விழியால் பேசி நின்றவளே
அழைத்து போக மாட்டாயா
ஆகமத்தை முடிக்காயா ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 09-12-2023

வீடியோ

காதல் செய்வோம் வா|காதல் கவிதைகள் |காதல் சோக கவிதை
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

காதல் செய்வோம் வா|காதல் கவிதைகள் |காதல் சோக கவிதை

காதல் செய்வோம் வா|காதல் கவிதைகள் |காதல் சோக கவிதை

https://www.youtube.com/watch?v=I-zyD3gKCs4