Tag: காட்டுப்பகுதியில்
கணேசபுரம் காட்டுப்பகுதியில் 16 வயது பெண் சடலம் மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 31/05/2022 Leave a Comment on கணேசபுரம் காட்டுப்பகுதியில் 16 வயது பெண் சடலம் மீட்பு
கணேசபுரம் காட்டுப்பகுதியில் 16 வயது பெண் சடலம் மீட்பு
நேற்று மாலை, குறித்த சிறுமி காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அண்மித்த பாதை ஒன்றில் அவரது காலணி மற்று புத்தகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
குறித்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதுடன், அந்தப் பகுதியில்
இருந்த கிணறு ஒன்றில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது







