Tag: ஒரே குடும்பத்தை சேர்ந்த
ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சுட்டு கொலை
ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சுட்டு கொலை
தென்னாப்பிரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ,
10 பேர் அவர்களது வீட்டில் வைத்து, மர்ம ஆயுத கும்பலினால் சுட்டு கொலை
செய்ய பட்டுள்ளனர் .
கடந்த தினம் அதிகாலையில் பீட்டர் மரிட்ஸ்பர்க் நகருக்கு அருகில் உள்ள,
அவர்களது வீட்டின் அருகே பதுங்கியிருந்த ஆயுத குழு திடீர் துப்பாக்கி தாக்குதலை நடத்தியது .
இந்த சூட்டு தாக்குதலில் அனைவரும் பலியாகினர் .
இரண்டு ஆயுத தாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் ,
ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் ,
மற்றொருவர் தப்பி ஓடிய வண்ணம் உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது .
இந்த படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
வெல்லவாய, நுகாய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் குழந்தை ஒன்று காயமடைந்துள்ளது.
வெல்லவாய – தனமல்வில வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று எதிர் திசையில் வந்த கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் முச்சக்கரவண்டியின் சாரதியான பொலிஸ் சார்ஜன்ட் (44 வயது) அவரது மனைவி (42 வயது) மற்றும் அவருடைய தந்தை (70 வயது) ஆகியோரே அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கரவண்டியில் பயணித்த 12 வயது சிறுவன் படுகாயமடைந்து மொணராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பில் கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் அப்போது குடிபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
























