Tag: உன் பார்வை போதும்
Posted in கவிதைகள்
உன் பார்வை போதும்
Author: நிருபர் காவலன் Published Date: 17/06/2023
உன் பார்வை போதும்
இதயம் உனை கண்டால்
இதயம் மெல்ல துடிக்குதே
இடரும் இங்கே மறந்து
இரு வாயும் சிரிக்குதே
உன்னை விழி பார்த்தே
உன்னை அள வெடுக்குதே
ஊட்டி கோடை கானலுக்கு
உன்னை அழைக்குதே
உன் பார்வை போதும்
வெட்கம் விட்டு நீ குலுங்க
வேர்வை கொட்டுதே
வேகும் இந்த வெயிலையும்
வேண்டி ஏற்குதே
பஞ்சு மெத்தை தேவையில்லை – உன்
பார்வை ஒன்றே போதுமே
பகலும் இங்கே இருளும்
பல கதை எழுதி மகிழும் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 17-06-2023

























