Tag: இலியானா
கவர்ச்சி உடையில் கலக்கும் இலியானா
கவர்ச்சி உடையில் கலக்கும் இலியானா
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை இலியானாவின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ஹிட் அடித்து வருகிறது.
கவர்ச்சி உடையில் கலக்கும் இலியானா… வைரலாகும் புகைப்படம்
இலியானா
நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’
திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். மேலும் தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
இலியானாஇலியானா
இவர் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது அவருடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இலியானா, தற்போது அவருடைய புதிய கவர்ச்சி
புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.
இலியானா
இலியானா
இவர் தற்போது இந்தி படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கருக்கலைப்பு செய்தநடிகை இலியானா
கருக்கலைப்பு செய்தநடிகை இலியானா
நடிகை இலியானா கர்ப்பமாக இருந்தார் என்றும், காதல் தோல்வி மன உளைச்சலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.
கர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்… வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா
இலியானா
தமிழில் கேடி படத்தில் அறிமுகமான இலியானா விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக
இருக்கிறார். இலியானாவும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நீபோனும் காதலித்தனர்.
இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை இலியானா அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தி வந்தார். ரகசிய திருமணம் நடந்து விட்டதாகவும்
கிசுகிசுத்தனர். ஆனால் சமீபத்தில் இலியானாவுக்கும், காதலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இலியானா கர்ப்பமாக இருந்தார் என்றும், கருக்கலைப்பு செய்தார் என்றும், காதல் தோல்வி மன உளைச்சலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.
இலியானா
இதற்கு விளக்கம் அளித்து நடிகை இலியானா கூறியதாவது: “நான் கர்ப்பமாக இருந்தேன். கருக்கலைப்பு செய்தேன் என்று வெளியான தகவல்கள் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
நான் தற்கொலைக்கு முயன்று பிறகு உயிர்பிழைத்ததாக எனது வேலைக்காரி சொன்னார் என்றும்
தகவல் வெளியானது. எனக்கு வேலைக்காரியே இல்லை. நான் தற்கொலைக்கு முயற்சி செய்யவும் இல்லை. இப்போது உயிருடன்தான் இருக்கிறேன்” என்றார்
உடல் பு குறித்து விமர்சனம்… கடுப்பான இலியானா
உடல் பு குறித்து விமர்சனம்… கடுப்பான இலியானா
தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானவர் இலியானா. கேடி படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு,
இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானா அளித்துள்ள பேட்டியில், “எல்லோரும் எனது உடல் அமைப்பு குறித்து விமர்சனம் செய்கிறார்கள்.
உடல் தோற்றத்தை வைத்து முன்பெல்லாம் இடுப்பழகி அன்று அழைத்தனர். இப்போது தோற்றம் மாறி இருப்பதால் வேறு மாதிரி விமர்சிக்கிறார்கள். இது வருத்தமாக உள்ளது.
இலியானா
எனது உடல் தோற்றத்தில் எனக்கே அதிருப்தி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் விமர்சனம் செய்கிறவர்கள் என் உடம்பில் இருக்கிற அழகான விஷயங்களையும்
கவனிக்க வேண்டும். எனது மூக்கு, உதடு அவ்வளவு அழகாக இருக்காது. எனது உயரமும் சரியானது இல்லை.
கைகள் மிகவும் ஒல்லியாக இருக்கும். கலரும் குறைவுதான். ஆனால் அதற்காக நான் அழகாக இல்லை என்று சொல்லிவிட முடியாது.
எனது உடலில் இன்னும் அழகான பகுதிகள் நிறைய உள்ளது. அதற்காக என்னை பாராட்டினால் நன்றாக இருக்கும்’’ என்றார்.
யாரையும் காதலிக்க நான் தயாராக இல்லை – இலியானா
யாரையும் காதலிக்க நான் தயாராக இல்லை – இலியானா
தமிழில் நண்பன் படத்தில் நடித்து பிரபலமான இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானாவுக்கும் ஆண்ட்ரூ என்பவருக்கும் நீண்ட நாட்களாக இருந்த காதல் இப்போது முறிந்துள்ளது.
இலியானா அளித்த பேட்டி வருமாறு:-
இனிமேல் யாரையும் காதலிக்க நான் தயாராக இல்லை. இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். என் வாழ்க்கை முறையை மாற்றி புதிய வழியில் வாழப்போகிறேன். உங்கள் மீது அக்கறையோடு இருங்கள். வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. சில நேரம் மற்றவர்களை நம்ப வேண்டி வரும். அந்த நேரத்தில் அவர்கள் மீது சார்ந்து இருக்க நினைப்போம். ஆனால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் நம்மோடு இருப்பார்களா? என்பது தெரியாது. நாம் மட்டும் மனப்பூர்வமாகவும், கண்மூடித்தனமாகவும் நம்பி அவர்களை அனுசரிப்போம். அப்படி இருக்க கூடாது. நம்மை பற்றி அதிகம் யோசிக்க வேண்டும்.
இலியானா
வாழ்க்கையில் எது நடந்தாலும் முதலில் நமக்காக இருப்பது நாம் மட்டும்தான். அதனால் என்மீது நான் அதிக அக்கறை எடுக்கிறேன். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் என்னை நன்றாக வைத்துக்கொள்கிறேன். இது நமது வாழ்க்கை. நாம்தான் பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்”.
இவ்வாறு இலியானா கூறினார்.







