Posted in Uncategorized

இரண்டாவது திருமணம் செய்யும் இசையமைப்பாளர் இமான்

இரண்டாவது திருமணம் செய்யும் இசையமைப்பாளர் இமான்

சமீபத்தில் மனைவியை பிரிந்த இசையமைப்பாளர் டி.இமான் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாவது திருமணம் செய்யும் இசையமைப்பாளர் இமான்
டி.இமான்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான். இவர்

இசையில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல படங்களுக்கு இமான் இசையமைத்து

வருகிறார். சமீபத்தில் அவருடைய மனைவி மோனிகாவை பிரிந்து விட்டதாக அறிவித்தார்.

2008-ஆம் ஆண்டு மோனிகா என்பவரை இமான் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே விவாகரத்து செய்ததாக கூறப்பட்டு பிறகு டிசம்பர் இறுதியில் அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார்.

இந்நிலையில் சட்ட ரீதியாக தனது மனைவியை பிரிந்த டி.இமான், தற்போது சென்னையை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்

வெளியாகியுள்ளது. இவர்கள் திருமணம் குறித்து இரு வீட்டாரும் பேசி வருவதாக கூறப்படுகிறது. இந்த திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

    Posted in சினிமா

    மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பளித்த டி.இமான்

    மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பளித்த டி.இமான்

    மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு தனது இசையில் பாட வாய்ப்பளித்த இசையமைப்பாளர் டி.இமானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பளித்த டி.இமான் – குவியும் பாராட்டு
    ஆதித்யா சுரேஷ், டி.இமான்


    தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் கைவசம் ரஜினியின் அண்ணாத்த, சூர்யாவின் 40-வது படம், விஜய் சேதுபதியின் லாபம், அரவிந்த் சாமியின் வணங்காமுடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல், மை டியர் பூதம் போன்ற படங்கள் உள்ளன.

    இந்நிலையில், இசையமைப்பாளர் இமான், கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஆதித்யா சுரேஷிற்கு, தனது படத்தில் பாட வாய்ப்பு அளித்துள்ளார்.

    இவருடன் இணைந்து சஹானா என்ற சிறுமியும் அப்பாடலை பாடி உள்ளார். ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில், இவர்களை பாட வைத்துள்ளதாக இமான் தெரிவித்துள்ளார்.

    மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பளித்த இமானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே திருமூர்த்தி என்கிற மாற்றுத்திறனாளி இளைஞருக்கு தனது இசையில்

    வெளியான சீறு என்ற படத்தில் மதுவந்தியே என்ற பாடலை பாட இமான், வாய்ப்பு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Posted in சினிமா

    இமான் பெயர் இல்லாத அண்ணாத்த போஸ்டர்

    இமான் பெயர் இல்லாத அண்ணாத்த போஸ்டர்

    சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தின் போஸ்டரில் இமான் பெயர் இடம்பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இமான் பெயர் இல்லாத அண்ணாத்த போஸ்டர்…. பாராட்டும் ரசிகர்கள்
    இமான்


    சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் அண்ணாத்த. இப்படம் இந்த வருட தீபாவளி தினமான நவம்பர் 4ம் தேதியன்று வெளியாகும் என்று படக்குழுவினர் நேற்று அறிவிப்பை வெளியிட்டார்கள்.

    இந்த போஸ்டரில் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்க இசையமைப்பாளர் இமான் பெயர் மட்டும் இடம் பெறவில்லை. இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    இமான்

    ரசிகர்களும் இமானுக்கு டேக் செய்து, உங்கள் பெயர் போஸ்டரில் இல்லை, எனினும் போஸ்டரை பகிர்ந்திருப்பது உங்களின் பெருந்தன்மை என பலரும் பாராட்டி உள்ளனர்.