Tag: இந்தியாவில் தஞ்சம்
Posted in இலங்கை செய்திகள்
4 இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்
Author: நிருபர் காவலன் Published Date: 31/07/2023
4 இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்
வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை இன்று (31) காலை சென்றடைந்துள்ளனர்.
தகவல் அறிந்த மரைன் பொலிஸார் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
4 இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்
இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என தெரிய வந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை
by நிருபர் காவலன் - ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது
by நிருபர் காவலன் - யானை தாக்குதல் முடிவு சீனா அமைக்கும் மூங்கில் வேலி
by நிருபர் காவலன் - மனித யானை மோதலில் பலர் உயிரிழப்பு
by நிருபர் காவலன் - SJB எம் பி சமிந்த விஜேசிரிக்கு 18 மாத சிறைத்தண்டனை
by நிருபர் காவலன்







