Tag: இசைக்கு இன்று
இசைக்கு இன்று பிறந்த நாள்
Author: நிருபர் காவலன் Published Date: 21/04/2023
இசைக்கு இன்று பிறந்த நாள்
ஈழம் வாழ எங்களுக்கு
இசை பாடினான்
இறுதி வரை எங்களுக்காய்
உயிர் ஆகினான்
மூச்சடங்கும் வரை எமக்காய்
முன் நிற்பவன்
முன்னே பல தடை வந்தும்
முயல் போல பாய்பவன்
ஆழம் மரமாகி எமக்கு
நிழல் தந்தவன்
அண்ணனவன் அருகிருந்து
ஆசி பெற்றவன்
ஈழம் ஆளும் பொழுது
என்னை ஏற்றவன்
இசை பாடி எனக்கு
உயிர் கொடுத்தவன்
மாலை போட்டு என்னை
மனம் தரித்தவன் -செல்லப்பா
அறம் பலகூறி என்னை
ஆளாக்கி வைத்தவன்
இன்று உந்தன் நாளிலே
இதயமதால் பாடுகிறேன்
இன்று போல என்றும் வாழ
இறைவனிடம் வேண்டுகிறேன் ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 21-04-2023
தமிழீழ தேசிய பாடகர் மாமனிதர் தேனிசை செல்லப்பா ஐயா பிறந்த நாள் வாழ்த்து பா

















