Tag: அஞ்சலி
மலர்தூவி அஞ்சலிசெலுத்திய UNமனித உரிமைகள்உயர்ஸ்தானிகர்
மலர்தூவி அஞ்சலிசெலுத்திய UNமனித உரிமைகள்உயர்ஸ்தானிகர்
மலர்தூவி அஞ்சலிசெலுத்திய UNமனித உரிமைகள்உயர்ஸ்தானிகர் ,இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இன்று (25) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.
உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் மாலை வந்திறங்கிய உயர்ஸ்தானிகர், முன்னதாககோவில் வீதியில் அமைந்துள்ள IOM அலுவகத்திற்கு சென்றிருந்தார்.
அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழி காணப்படும் சிந்துபாத்தி இந்து மயானத்திற்கு சென்று புதைகுழிகளை நேரில் பார்வையிட்டார்.
அதன் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் போது, களத்தில் நின்ற சட்டத்தரணிகள் , மனித புதைகுழி அப்பகுதியில் காணப்படுவதாக பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தவர்கள் உள்ளிட்ட தரப்பினர்களிடம் புதைகுழிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ். வளைவுக்கு அருகில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘அணையா
விளக்கு’ போராட்ட களத்திற்கு நேரில் சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஏற்றப்பட்ட அணையா தீபத்திற்கு முன்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நடிகைமாலினி பூதஉடலுக்கு பிரதமரை அஞ்சலி
நடிகைமாலினி பூதஉடலுக்கு பிரதமரை அஞ்சலி
நடிகைமாலினி பூதஉடலுக்கு பிரதமரை அஞ்சலி செலுத்தினார்.
சிங்களத் திரைப்படத் துறையில் முடி சூடா ராணியாக திகழ்ந்த மாலினி பொன்சேகாவின் பூத உடலுக்கு ,இலங்கை பிரதமர் இன்று நேரடியாக சென்று தனது அஞ்சலி எச்சரித்தியுள்ளார்.
பிரதமர் ஹரிணி அமர சூரியா மாலினிக்கு அஞ்சலி
பிரதமர் ஹரிணி அமர சூரியா ஞாயிற்றுக்கிழமை சென்று தனது அஞ்சலியை செலுத்திய காட்சிகள் இப்பொழுது வெளியாகியிருக்கின்றது .
இலங்கை திரைப்படத்துறையின் முக்கிய வளர்ச்சிக்கு மூல காரணமாக விளங்கியவர் பல ஆயிரக்கணக்கான மக்கள் நெஞ்சங்களை தொட்ட ,பிரபல நடிகையாக மாலினி போன்றேக உள்ளதாகவும் மக்கள் ரசிகர்கள் தெரிவிக்கின்றன.
பிரபல நடிகை மாலினி பொன்சேகா இளப்ப்பை அடுத்து இப்பொழுது இலங்கை அரசியல் பிரபலங்கள் சென்று அவருக்கு நமது அஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர்.
கலை உலக பிரபலங்களுடன் அரசியல் பிரபலங்கள் தொடர்புகள் இருக்கிறார்கள் என்பதற்கு ,மாலினி பொன்சேகாவின் உடைய இந்த மரணமும் அதன் ஊடாக அங்கு வருகின்ற தகவலும் பறை சாற்றுகிறது .
முன்னாள் ஜனாதிபதிகள் மாலினிக்கு அஞ்சலி
இந்த நடிகை மாலினி பொன்சேகா இந்த மரணத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்,ஷ ஆகியோர் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- அயதுல்லா அலி கமெனி அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவும் ஈரானும் மாறி மாறித் தாக்குதல்

- வெப்பத்தினால் ஜெர்மனியில் 5000 பேர் பலி

- ஸ்பெயினில் காட்டுத்தீயில் பன்னிரண்டு பேர் உயிரிழப்பு

- டிரம்ப்பைக் கொலை செய்வதற்கான ஈரானிய சதித்திட்டம்

- இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் பதஹேவஹேட்ட பிரதேச சபை தலைவர் கைது

- மேற்கு மாகாணத்தில் டெங்கு பாதிப்புகள் 35000

- நெல் கொள்முதல் விவாசயிகள் மகிழ்ச்சி

- உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு

- நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை

- 90 ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்

- அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானின் தெஹ்ரான்-மஷ்ஹத் ரயில் சேவை நிறுத்தம்

- குவைத் கத்தார் பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய மஹிந்தா
சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய மஹிந்தா
சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய மஹிந்தா ,தமிழின இனவழிப்பு கதாநாயகனாகவும் இலங்கை உடைய ஆளுங்கட்சியின் ஜனாதிபதி யாக விளங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மரணமாகிய சம்பந்தன் அவர்களுக்கு தனது இறுதி வணக்கத்தை தெரிவித்தார் .
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் சம்பந்தன்
மூத்த அரசியல்வாதியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமாக விளங்கிய இரா சம்பந்தன் அவர்களது உடலுக்கு தனது இறுதி வணக்கத்தை தெரிவித்தார்.
இந்த நிகழ்வுக்கு கலந்து கொண்டு ஆதரவையும் தனது ஆறுதலையும் தெரிவித்த மஹிந்த ராஜபக்சா .
சீன அச்சென்று திரும்போல மகிந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார் .
பல்வேறுபட்ட மூத்த அரசியல்வாதிகளும் கலந்து கொண்டு சம்பந்தன் அவர்களது இறுதி இறுதி அஞ்சலியை செலுத்தினர் .
மக்களுக்கான விடுதலையை பெற்றுத் தருவதாக கூறிக்கொண்டு தமிழ் தேசிய விடுதலை இயக்கங்களை ஆரம்பித்த சம்பந்தன்.
இறுதியில் தமிழர்களை கைவிட்டு ஆளுமைகளுடன் கூடியிருந்து, தனது சுயநல அரசியபோய் முன்னெடுத்தார் என்கின்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஆளும் அரசுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு அந்த அரசுகளின் இனவெழுப்பு நடவடிக்கை மற்றும் அவர்கள் அரசாட்சியை கவிழ்க்காமல் ஆதரவு தெரிவித்து அவர்களது பின்புலத்தில் செயல்பட்ட இந்த குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது .
ஆனால் ஒரு சாரரோ சம்பந்தன் அவர்கள் தமிழ் மக்களுக்கு வீர தீர செயல்களை செய்ததாகவும் அவர் வரலாற்றில் கல்லறைகள் பொறிக்கப்பட வேண்டிய ஒருவர என புகழ்ந்து தள்ளி வருகின்றனர் .
ஆக மொத்தம் அரசியல்வாதி ஒருவர் இருந்திருந்தால் மக்களுடையஎண்ண அலைகள் வேறு விதமாக இருந்திருக்கும் .
ஆனால் சம்பந்தனுடைய இந்த மரணத்தின் பொழுது மக்கள் அவ்வாறான தமது நிலைகளை காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவரது மரணத்தின் பின்னால் புரிந்துகொள்ள முடிகிறது .
இறுதி காலங்களில் சம்பந்தம் தமிழ் மக்களுக்கும் தமிழ் தேசிய விடுதலைக்கும் எதிராகவும் பல கருத்துக்களையும் ,வசனங்களையும்
முன்வைத்து வந்த நிலையை சம்பந்தனுக்கு எதிராக பல மக்கள் பிரிந்து நிற்கின்ற கார் சூழல் உருவாகியுள்ளது என்பது குறிப்பிட தக்கது .
- இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் பதஹேவஹேட்ட பிரதேச சபை தலைவர் கைது

- மேற்கு மாகாணத்தில் டெங்கு பாதிப்புகள் 35000

- நெல் கொள்முதல் விவாசயிகள் மகிழ்ச்சி

- உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு

- நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை

- அமெரிக்க டாலரின் விற்பனை விகிதம் 340-ஐத் தாண்டியது

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுகாதாரத் தரநிலைகளை ஏற்படுத்த ஜனாதிபதி அழைப்பு

- மத்திய அதிவேக நெடுஞ்சாலை கன்னோருவா வரை நீட்டிக்கப்பட உள்ளது

- மருத்துவர் கொலை குற்றவாளி கைது

சாந்தனின் உடலுக்கு பெருந்திரளானோர் அஞ்சலி
சாந்தனின் உடலுக்கு பெருந்திரளானோர் அஞ்சலி
திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த சாந்தன், உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து காலமானார்.
இந்நிலையில் அவரது உடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு அரச
வைத்தியசாலையில் வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவின் பின்னர் அவரது உடல் வவுனியாவிற்கு எடுத்து வரப்பட்டது.
சாந்தனின் உடலுக்கு பெருந்திரளானோர் அஞ்சலி
வவுனியா முன்னாள் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (03) காலை 7.30மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில்
சாந்தனின் உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பின்னர் ஊர்வலமாக வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
அங்கு பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்ணீருக்கு மத்தியில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.அதனைத்தொடர்ந்து தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக மாங்குளம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது
விஜயகாந்திற்கு சாணக்கியன் அஞ்சலி
விஜயகாந்திற்கு சாணக்கியன் அஞ்சலி
எம் மக்கள்மீது அளவுகடந்த அன்பு கொண்ட புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்கள் அடக்கம் செயப்படுள்ள சென்னை கோயம்பேடு பகுதியில் இருக்கும்
அவரது கட்சி அலுவலகத்தில் சென்று வட கிழக்கு மக்கள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அஞ்சலி செலுத்தினர்.
பிறகு அங்குள்ள ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
விஜயகாந்திற்கு சாணக்கியன் அஞ்சலி
திரு. விஜயகாந்த் அவர்கள் 80 மற்றும் 90 ஆண்டு காலப்பகுதியில் தமிழ் ஈழ போராட்டத்துக்கு மிக முக்கிய ஆதரவு வழங்கியவர்களில் மிக முக்கியமான ஒருவர்.
எமக்கான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியானவர். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் எனில் அவரது ஆதரவாளர்கள் ஈழத்
தமிழர்களுடன் மற்றும் ஈழ தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இவ் போராட்டத்துக்கு வலு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என சாணக்கியன் தெரிவித்தார்.
தலைகீழாக தொங்கிய நடிகை
தலைகீழாக தொங்கிய நடிகை
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஒருவர் தலைகீழாக யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தலைகீழாக தொங்கிய நடிகை…. வைரலாகும் புகைப்படங்கள்
அஞ்சலி
‘கற்றது தமிழ்’ படம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. பின்னர் ‘அங்காடித் தெரு’ படம் அவரை தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெறச் செய்தது. எங்கேயும் எப்போதும்,
இறைவி உள்ளிட்ட படங்களில் அவர் நடிப்புக்கு பெயர் கிடைத்தது. நடிகை அஞ்சலி கடைசியாக தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘வக்கீல் சாப்’ படத்தில் நடித்திருந்தார்.
தற்போது சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அஞ்சலி
துணியில் தலைகீழாக தொங்கியபடி யோகா செய்யும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வதந்தி… நம்பாதீங்க… அஞ்சலி.
வதந்தி… நம்பாதீங்க… அஞ்சலி.
கற்றது தமிழ்’ படம் மூலமாக ராம் இயக்கத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. பின்னர் ‘அங்காடித் தெரு’ படம் அவரை தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெறச் செய்தது.
எங்கேயும் எப்போதும், இறைவி உள்ளிட்ட படங்களில் அவர் நடிப்புக்கு பெயர் கிடைத்தது. தற்போது சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை அஞ்சலி கடைசியாக தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘வக்கீல் சாப்’ படத்தில் நடித்திருந்தார்.
தற்போது அஞ்சலி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றது. அஞ்சலி திருமணம் குறித்து அடிக்கடி
வதந்திகள் பரவுவதுண்டு. அதே போல் தான் தற்போது வெளியாகியுள்ள திருமண செய்தியும் வதந்தி தான் என்று அஞ்சலி தெரிவித்துள்ளார்.
அஞ்சலி
“தற்போது நான் எனது திரை வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறேன். திருமணம் குறித்து நான் தற்போது யோசிக்கவில்லை.
வரவிருக்கும் நாட்களில் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
மீண்டும் வீழ்த்திய கொரோனா… வருத்தத்தில் அஞ்சலி
மீண்டும் வீழ்த்திய கொரோனா… வருத்தத்தில் அஞ்சலி
தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள அஞ்சலி, சமீபத்தில் அளித்த பேட்டியில் கொரோனா முன் எச்சரிக்கைகள் பற்றி கூறி இருக்கிறார்.
தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள அஞ்சலி, கொரோனா முன் எச்சரிக்கைகள் குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
‘‘மக்கள் அனைவரும் கொரோனா முன் எச்சரிக்கையை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. முக கவசம் அணியுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் கைகளை அடிக்கடி
கழுவுங்கள். கொரோனா தொடர்ந்து நம்மை வேதனைப்படுத்தி வருகிறது. பலர் நெருங்கியவர்களை இழந்து நிற்கிறார்கள். இதை மனதில் வைத்து எச்சரிக்கையாக இருங்கள்.
கொரோனா விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். நானும் கொரோனா காலத்தில் படப்பிடிப்புகளில் பங்கேற்கிறேன். ஆனால் அனைத்து முன் எச்சரிக்கையையும்
எடுத்துக்கொள்கிறேன். என் அருகில் இருக்கும் உதவியாளர்களும் ஜாக்கிரதையாக உள்ளனர். படப்பிடிப்பு அரங்கில் எல்லோரும் முக கவசம் அணிகிறார்கள். சமூக இடைவெளி கடைப்பிடிக்கிறார்கள்.
அஞ்சலி
எல்லோரும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் உணவை சாப்பிடுங்கள். சாப்பிடுவது, தூங்குவது என்று இல்லாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். கொரோனாவால் எல்லா துறையும் நஷ்டம்
ஆகி விட்டது. சினிமா உயிர்த்தெழுந்த நேரத்தில் இரண்டாவது அலை வந்து வீழ்த்தி இருக்கிறது. நோய் தொற்றோடு சேர்ந்து நாம் பயணம் செய்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.”
இவ்வாறு அஞ்சலி வருத்தத்தோடு கூறினார்.















