Tag: Stabbing
லண்டன் லூசியம் தமிழர் கடை முன்பாக வாலிபன் மீது கத்தி வெட்டு
Author: நிருபர் காவலன் Published Date: 29/04/2022 Leave a Comment on லண்டன் லூசியம் தமிழர் கடை முன்பாக வாலிபன் மீது கத்தி வெட்டு
லண்டன் லூசியம் தமிழர் கடை முன்பாக வாலிபன் மீது கத்தி வெட்டு
இன்று வியாழக்கிழமை மதியம் மூன்று மணியளவில் லீ கை வீதியில்
பதினெட்டு வயது வாலிபன் மீது மர்ம நபர்கள் திடீர் கத்தி குத்து தாக்குதலை நடத்தினர்
இதில் குறித்த வாலிபன் பலத்த கத்தி குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
இவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் ,இதுவரை
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்ய படவில்லை ,
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,குறித்த சம்பவமானது
தமிழர் கடைகளின் முன்பாக உள்ள வீதியில் இடம்பெற்றுள்ளது ,இதன் அருகில் புகழ் வாய்ந்த லண்டன் சிவன் ஆலயம் உள்ளது
அதிக தமிழர்கள் இந்த ஆலயங்கள் ,மற்றும் பிரபல தமிழர் உணவகங்கள்,
பல்பொருள் அங்காடிகளுக்கு வந்து செல்கின்றமை குறிப்பிட தக்கது






