Tag: NPP
நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP
நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP
நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP ,தேசிய மக்கள் சக்தி (NPP) நாளை தீவு முழுவதும் உள்ள 21 முக்கிய நகரங்களில் 21 மே தினக் கொண்டாட்டங்களை நடத்தவுள்ளதாக NPP தெரிவித்துள்ளது.
NPP தலைவர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க
NPP தலைவர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் டி.ஆர்.இ. ஹரினி அமரசூரிய மற்றும் ஜே.வி.பி. பொதுச் செயலாளர் தில்வின் சில்வா ஆகியோர் இந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்க உள்ளனர்.
ஜனாதிபதி நாளை காலை நுவரெலியாவில் நடைபெறும் மே தினக் கொண்டாட்டத்திலும், பிற்பகலில் மகாரகமவில் நடைபெறும் கொண்டாட்டத்திலும் கலந்துகொள்ள உள்ளார்.
பிரதமர் இரத்தினபுரவில் நடைபெறும் மே தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்பார்.
ஜே.வி.பி. பொதுச் செயலாளர் தில்வின் சில்வா
ஜே.வி.பி. பொதுச் செயலாளர் தில்வின் சில்வா களுத்துறை, மாத்தறை மற்றும் தங்கல்லையில் நடைபெறும் மே தினக் கொண்டாட்டங்களிலும், அமைச்சர்
பிமல் ரத்நாயக்க வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மே தினக் கொண்டாட்டங்களிலும் பங்கேற்பார்கள்.
- உலகில் அதிக வரியை அறவிடும் நாடக இலங்கை

- 17 மாவட்டங்களில் மோசமான வானிலையால் 21,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- அர்னாப் புயல் கடற்கரையைத் தாக்கியதால் 1,80,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

- நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு உத்தரவு

- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது

- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்

- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது

- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை

- பிரவுன்ஸ் ஹில் நில வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது

- மாகாண சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் முறை குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களைத் தெரிவுக்குழு கோரியது

- ஞானசார தேரரின் விடுதலையைப் பெற தலைமைப் பிரமுகர்கள் எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை

- சுதந்திரமான நடமாட்டம் குறித்து இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் விவாதிக்க உள்ளனர்

NPP யாருக்கான அரசாங்கம்
NPP யாருக்கான அரசாங்கம்
NPP யாருக்கான அரசாங்கம் ,புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் முகமாக, தேசிய மக்கள் சக்தி (NPP)
அரசாங்கம் இலங்கையர்களின் அரசாங்கம் என்றும் சிங்களவர்கள், முஸ்லிம்கள் அல்லது தமிழர்களின் அரசாங்கம் அல்ல எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இது நியாயமற்ற விமர்சனம் என்றும், NPP க்குக் கிடைத்த மக்கள் ஆணையை அவமதிப்பதாகவும் கூறினார்.
76 ஆண்டுகளில் அனைத்து சமூகங்களும் தங்களது மத, கலாசார வேறுபாடுகளை மறந்து ஒரே நாடாக வாக்களித்து பெரும்பான்மை
ஆட்சியைத் தேர்ந்தெடுப்பது இதுவே முதல் முறை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
NPP அரசாங்கம் எந்தவொரு சமூகத்தையும் அவர்களின் மத அல்லது கலாச்சார நடைமுறைகளின் அடிப்படையில் ஒருபோதும் பாகுபாடு காட்டாது
என்று வலியுறுத்திய அமைச்சர் ரத்நாயக்க, அது தமது அரசாங்கத்தின் புத்தகங்களிலும் இல்லை என்றும் கூறினார்.
அமைச்சரவையில் முஸ்லிம் எம்.பி.க்கள் இல்லாதது தொடர்பான விமர்சனங்கள் தொடர்பில் அமைச்சர் ரத்நாயக்க கூறுகையில், பல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏனைய சமூகங்களைச் சேர்ந்த பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
“கல்முனை, சம்மாந்துறை, வட மாகாணம் மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றோம்.
முதல் தடவையாக மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
கம்பஹா மாவட்டத்திலும் இதே நிலைதான். கண்டி மாவட்டத்தில் இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதற்கு முன்னர் ஒருபோதும்
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினருக்கு வாக்களிக்காத மாவட்டங்களில் இருந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.
திகாமடுல்ல, சம்மாந்துறை, கல்முனை, அக்கரைப்பற்று ஆகிய தொகுதிகளில் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்” என அவர் தெளிவுபடுத்தினார்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.
NPP அரசாங்கம் அத்தகைய இன அல்லது சமூகப் பாகுபாடுகளை எந்த வகையிலும் ஒப்புக் கொள்ளாது என்று அவர் வலியுறுத்தினார்.










