Tag: ரசியா பாடசாலையில்
Posted in உலக செய்திகள்
ரசியா பாடசாலையில் துப்பாக்கி சூடு 17 பேர் மரணம் 24 பேர் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 28/09/2022 Leave a Comment on ரசியா பாடசாலையில் துப்பாக்கி சூடு 17 பேர் மரணம் 24 பேர் காயம்
ரசியா பாடசாலையில் துப்பாக்கி சூடு 17 பேர் மரணம் 24 பேர் காயம்
ரசியாவின் School No 88 in Izhevsk பாடசாலைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி 17 பேர் பலியாகியும் ,மேலும் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
இந்த கொலை வெறியாட்ட செயல் பாடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பாடசாலையில் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது இதுவரை தெரியவரவில்லை .தாக்குதலை நடத்தியவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் .
இந்த அதிர்ச்சியூட்டும் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
ரசியா அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரு நிலையில் ,
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .









