Tag: மீனவர்களுடன்
ஏழு மீனவர்களுடன் இந்திய மீன்பிடி இழுவைப் படகைக் கடற்படை பறிமுதல்
ஏழு மீனவர்களுடன் இந்திய மீன்பிடி இழுவைப் படகைக் கடற்படை பறிமுதல்
ஏழு மீனவர்களுடன் இந்திய மீன்பிடி இழுவைப் படகைக் கடற்படை பறிமுதல் தலைமன்னார் கடற்பகுதியில் ஏழு மீனவர்களுடன் இந்திய மீன்பிடி இழுவைப் படகைக் கடற்படை பறிமுதல் செய்தது
இன்று காலை (01) தலைமன்னாருக்கு வடக்கே உள்ள இலங்கை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி இழுவைப் படகு ஒன்றை
இலங்கை கடற்படை பறிமுதல் செய்து, ஏழு இந்திய மீனவர்களைக் கைது செய்துள்ளது.
தலைமன்னாருக்கு வடக்கே உள்ள இலங்கை கடற்பகுதியில் ஏராளமான இந்திய மீன்பிடி இழுவைப் படகுகள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத
மீன்பிடித்தலில் ஈடுபட்டதை கடற்படையினர் கண்டறிந்ததை அடுத்து, வட மத்திய கடற்படை கட்டளையகத்தால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களும், பறிமுதல் செய்யப்பட்ட இழுவைப் படகும் தலைமன்னார் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சட்ட
நடவடிக்கைகளுக்காக மீன்வளம் மற்றும் நீர்வளங்கள் திணைக்களத்தின் மன்னார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும்.








