Tag: மாவடிச்சேனையில் பாரிய தீ
Posted in இலங்கை செய்திகள்
மாவடிச்சேனையில் பாரிய தீ
Author: நிருபர் காவலன் Published Date: 28/03/2025
மாவடிச்சேனையில் பாரிய தீ
மாவடிச்சேனையில் பாரிய தீ ,வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு பிரதான வீதி மாவடிச்சேனையில் அமைந்துள்ள மின்சாரப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த தீ விபத்து சம்பவம் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தீ விபத்தை கட்டுப்படுத்த ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் மட்டக்களப்பு தீ அணைக்கும் படை, பிரதேச சமூக மட்ட அமைப்பினர், பிரதேச இளைஞர்கள் எனப்பலரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வந்த நிலையில், குறித்த தீ விபத்தில் வர்த்தக நிலையத்தில் இருந்த பல இலட்சம் பெறுமதியான அனைத்துப் பொருட்களும் தீயில் கருகி உள்ளன.
குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
- நிலச்சரிவைத் தொடர்ந்து அப்கன்ட்ரி ரயில் பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன

- கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடை

- போதைப்பொருளுடன் கடற்கரையில் வைத்துப் பிடித்ததாக அதிகாரிகள்

- பாதாள உலகக் கும்பல் தலைவர் ‘பத்துவத்த சமர’ நவம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- 208 காவல்துறை அதிகாரிகள் கைது; கிட்டத்தட்ட 1,500 பேர் பணியிடை நீக்கம்









