களுத்துறை கடலில் மனிதசடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

களுத்துறை கடலில் மனிதசடலம் மீட்பு

களுத்துறை கடலில் மனிதசடலம் மீட்பு

களுத்துறை கடலில் மனிதசடலம் மீட்பு ,களுத்துறை கடல் கரையில் ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மனித சடலத்தை மீட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

கடற்கரையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தந்தையும் மகளும்

கடற்கரையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தந்தையும் மகளும் குறித்த சடலத்தை கண்ணுற்று அவசர காவல்துறை இலக்கத்திற்கு

தெரியப்படுத்தியதை அடுத்து ,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மனித சடலத்தை மீட்டுனர்.

இறந்தவர் ஏறத்தாழ 60 வயதுக்கு உள்ளிட்ட நபராக இருக்க கூடும் என கருதப்படுகிறது.

இவ்விதம் இறந்தவர் கருப்பு நிற காய்ச்சட்டை ,பெல்ட் ,மற்றும் வெள்ளை டீசேர்ட் என்பன அணிந்திருந்ததாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

குற்ற பிரிவின் விசாரணைகளை ஆரம்பம்

இந்த மரண சம்பவம் தொடர்பாக தற்போது குற்ற பிரிவினர் தமது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் நாள்தோறும் நீர்ஏரிகள் , பற்றை காடுகள், பாழடைந்த வீடுகள், மரங்கள் ஆறுகள், என்பனவற்றில் இவ்வாறு மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருவது ,தொடர்ந்து மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இது படுகொலையா, தற்கொலையா, அல்லது விபத்து மரணமா என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.

கடல் கரையில் மீட்க பட்ட மனித சடலத்தை அடையாளம் காணும் நடவடிக்கையில் களுத்துறை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .