Tag: பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்
பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 13/06/2025
பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உன்னாருவ பகுதியில் உள்ள வயல் ஒன்றில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (12) மாலை மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இந்த சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ஏறக்குறைய 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் எனவும், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







