Tag: புலிச் சின்னம்
புலிச் சின்னம் அணிந்த இளைஞனின் விடுதலையில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை
புலிச் சின்னம் அணிந்த இளைஞனின் விடுதலையில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை
தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்புடன் சம்மந்தப்பட்ட ரீசேர்ட் அணிந்திருந்தமையினால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் பெற்றோர் இன்று(01.12.2023) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தங்களின் குடும்ப நிலையை எடுத்துக்கூறியதுடன், மகனின் விடுதலைக்கு உதவுமாறும் கேட்டனர்.
இந்நிலையில் உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களுக்கு நிலமைகளை எடுத்துக்கூறினார்.
இதனையடுத்து, குறித்த இளைஞனின் பெற்றோருக்கு நம்பிக்கையளித்த அமைச்சர், சஞ்சலமடைந்து தேவையற்ற பண விரயங்களை செய்யாமல் பொறுமையாக இருக்குமாறும் ஆறுதல் தெரிவித்து அனுப்பி வைத்தார்.
புலிச் சின்னம் அணிந்த இளைஞனின் விடுதலையில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை
கடந்த 27 ஆம் திகதி சில அரசியல் தரப்புக்களினால் மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கொடிகாம பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விற்கு சென்ற
அப்பிரதேசத்தினை சேர்ந்த யூட் சுரேஸ்குமார் டனுஜன்(வயது – 23) என்ற இளைஞன் தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படம் புலிச் சின்னம் ஆகியவை பொறிக்கப்பட்ட ரீசேர்ட் அணிந்திருந்தார்.
இதனடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞன், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
- மருந்தை தடுத்து காசா மக்களை கொல்லும் இஸ்ரேல்
- ஐரோப்பிய தூதர்கள் மீதான குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள்
- டெல் அவிவ்-வியன்னா விமான ‘அச்சுறுத்தலுக்குப்’ பிறகு எந்த ஆபத்தும் கண்டறியப்படவில்லை
- இலங்கை 2.24 பில்லியன் அமெரிக்க டாலர் சுற்றுலா வருவாயைப் பதிவு
- கவந்திஸ்ஸா’ ஆண் யானை சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது
- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு
- நிதிப் பற்றாக்குறையால் காசாவிற்கான உதவியைக் குறைக்க உலக உணவுத் திட்டம் நிர்பந்திக்கப்படுகிறது
- அக்போ’ என்ற ஆண் யானை கண்டெடுக்கப்பட்டது
- கொழும்பு துறைமுகத்தில் புதிய தளவாட மையத்தை உருவாக்க இலங்கை துறைமுக ஆணையம் (SLPA) முடிவு


















