Tag: பாதாள உலகக்குழு
Posted in இலங்கை செய்திகள்
அச்சுறுத்தி வந்த பாதாள உலகக்குழு உறுப்பினர் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 18/08/2023
அச்சுறுத்தி வந்த பாதாள உலகக்குழு உறுப்பினர் கைது
தென் மாகாணத்தை அச்சுறுத்தி மனிதப் படுகொலைகளை மேற்கொண்டு வரும் பாரிய குற்றவாளியின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயாகல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் தற்போது வெளிநாட்டில் உள்ள அம்பலாங்கொட டில்ஷானின் பிரதான உதவியாளர் என்பதுடன், இலங்கையில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாகவும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரனாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அச்சுறுத்தி வந்த பாதாள உலகக்குழு உறுப்பினர் கைது
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபரிடம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட வெளியேறும் வாயிலுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- பிரவுன்ஸ் ஹில் நில வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுby நிருபர் காவலன்
- மாகாண சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் முறை குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களைத் தெரிவுக்குழு கோரியதுby நிருபர் காவலன்
- ஞானசார தேரரின் விடுதலையைப் பெற தலைமைப் பிரமுகர்கள் எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லைby நிருபர் காவலன்
- சுதந்திரமான நடமாட்டம் குறித்து இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் விவாதிக்க உள்ளனர்by நிருபர் காவலன்
- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு மக்கள் அவதிby நிருபர் காவலன்













