Tag: ஜானகி சிறிவர்தன
நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்
நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்
நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்
சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ ஒப்பந்தம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் கிரிஷ் குழுமத்தின் முன்னாள் நிறைவேற்று இயக்குனரும் வர்த்தகப் பிரமுகருமான
ஜானகி சிறிவர்தன ஆகியோர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் அக்டோபர் 16 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர்கள் சார்பாக வாதாடும்
வழக்கறிஞர்கள் சமர்ப்பித்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார் என அட தெரனா செய்தியாளர் தெரிவித்தார்.
சந்தேக நபர்களின் பிணை மனுக்கள் மீதான முடிவு அதே நாளில் அறிவிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளது.








