Tag: செய்தவர் மரணம்
அங்க பிரதட்சணம் செய்தவர் மரணம்
அங்க பிரதட்சணம் செய்தவர் மரணம்
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் அங்கப் பிரதட்சணம் செய்த யாழ்ப்பாணம், நாவலர் வீதியை சேர்ந்த சின்னையா சுரேஷ்குமார் (வயது 57) என்பவர் உயிரிழந்தார்.
ஒவ்வொரு வருடமும் திருவிழா காலத்தில் இவர். வழக்கமாக அங்கப் பிரதட்சணம் செய்து வருகிறார். திருவிழா தொடங்கிய நாள்முதல் வழமை போன்று அவர் இந்த வருடமும் தினமும் அங்கப் பிரதட்சணம் செய்து வந்துள்ளார்.
அங்க பிரதட்சணம் செய்தவர் மரணம்
திங்கட்கிழமை 28 அங்கப் பிரதட்சணத்தை நிறைவு செய்த நிலையில் திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார். உடனடியாக அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மாரடைப்பு காரணமாகவே மரணம் சம்பவித்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மரண விசாரணைகளை பருத்தித்துறை ஆதார மருத்துவமனை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா நடத்தினார்.
- ஞானசார தேரரின் விடுதலையைக் கோரும் பேரணி ஐந்தாம் நாளை எட்டியதுby நிருபர் காவலன்
- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்by நிருபர் காவலன்
- பசில் ராஜபக்சவைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததுby நிருபர் காவலன்
- இன்று தீவின் சில பகுதிகளில் கனமழைby நிருபர் காவலன்
- அனைத்து மாகாணங்களிலும் கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்













