Tag: சுசிலா
Posted in உலக செய்திகள்
பின்னணி பாடகி பி.சுசிலாவுக்கு சுகயீனம்
Author: நிருபர் காவலன் Published Date: 18/08/2024
பின்னணி பாடகி பி.சுசிலாவுக்கு சுகயீனம்
பின்னணி பாடகி பி.சுசிலாவுக்கு சுகயீனம் ,பிரபல பின்னணி பாடகி பி.சுசிலா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 9 மொழிகளில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பி சுசீலா. 70 மற்றும் 80களின் நடிகைகளான சாவித்ரி, பத்மினி, சரோஜா தேவி உள்ளிட்ட நடிகைகள் நடித்துள்ள படத்தில் அவர்களுக்காக பின்னணி பாடியுள்ளார்.
உயர்ந்த மனிதன் படத்தில் இடம் பெற்ற “பால் போலவே” என்ற பாடலுக்காக முதன் முறையாக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை பெற்றார்.
வயது மூப்பு காரணமாக திரைப்படங்களில் பாடுவதை அவர் தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் பி.சுசிலா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்ட ஈரான் அனுமதிக்காது

- காசா போர்க்குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நெதர்லாந்துக்கு வருகை தந்த அமெரிக்க-இஸ்ரேலிய முன்னாள் ராணுவ வீரர்

- பராகுவே ஜனாதிபதி சாண்டியாகோ பென்யா பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்

- ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தகவல்களுக்கு 20 மில்லியன் டாலர் வரை வெகுமதி சென்ட்காம்

- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்










