Tag: கொரோனா
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக உயர்வு
Author: நலன் விரும்பி Published Date: 28/11/2020 Leave a Comment on இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக உயர்வு
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக உயர்வு
அதற்கமைய இன்றைய தினம் 8 பேர் உயிரிழந்துள்ளனரென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பெண்களும் 4 ஆண்களுமே இன்று உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய கொழும்பு 13ஐச் சேர்ந்த 67 வயதுடைய பெண், தெமட்டகொடையைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்,
மருதானையைச் சேர்ந்த 78 வயது பெண், மட்டக்குளியைச் சேர்ந்த 36 வயதுடைய ஆண், கொம்பனித்தெருவைச் சேர்ந்த 83 வயதுடைய
ஆண், மாளிகாவத்தையைச் சேர்ந்த 58 வயதுடைய பெண், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண், 70 வயதான
கொழும்பு மெகசின் சிறைக் கைதியொருவருமே கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது






