Tag: குருந்தூர் மலை விவகாரம்
குருந்தூர் மலை விவகாரம் பொலிஸில் முறைப்பாடு
குருந்தூர் மலை விவகாரம் பொலிஸில் முறைப்பாடு
குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் சைவவழிபாடுகளை மேற்கொள்ள முடியுமென ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (15) குருந்தூர்மலையில் சைவவழிபாடுகளை மேற்கொள்ளச் சென்ற தமிழ் மக்களுடைய வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை
உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்களான அன்டனி ஜெயநாதன் பீட்டர் இளஞ்செழியன், இரத்தினம் ஜெகதீசன் ஆகியோரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குருந்தூர் மலை விவகாரம் பொலிஸில் முறைப்பாடு
அந்தவகையில் தேரர்கள் மற்றும், சில சிங்கள மக்களே இவ்வாறு இடையூறு விளைவித்ததாக குறித்த முறைப்பாட்டில் தாம் குறிப்பிட்டுள்ளதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு நீதிமன்றக் கட்டளையை நடைமுறைப்படுத்தவேண்டிய பொலிஸார் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு பக்கச்சார்பாகச் செயற்பட்டதாகவும் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளதாக முறைப்பாட்டாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்












