Tag: கழிவு நீர்
Posted in இலங்கை செய்திகள்
மட்டக்குளியில் கழிவு நீர் கால்வாயில் குதித்த குடு ராணி
Author: நிருபர் காவலன் Published Date: 04/03/2024
மட்டக்குளியில் கழிவு நீர் கால்வாயில் குதித்த குடு ராணி
மட்டக்குளியில் கதிரானவத்தை குடு ராணி என அழைக்கப்படும் 45 வயதுடைய பெண் ஒருவரை பெரும் முயற்சியின் பின்னர் பொலிஸார் நேற்று (03) கைது செய்துள்ளனர்.
யுக்திய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் விசேட பணியக அதிகாரிகள் குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்ட போது, அவர் அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் குதித்துள்ளார்.
பின்னர் மேலதிக பொலிஸ் அதிகாரிகள் குழு, சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த பெண்ணிடம் இருந்து 5 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதை பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு








