Tag: கடற்கரையில்
Posted in இலங்கை செய்திகள்
மிரிஸ்ஸா கடற்கரையில் நீரில் மூழ்கிய இரு இந்தியர்கள் மீட்கப்பட்டனர்
Author: நிருபர் காவலன் Published Date: 01/11/2026
மிரிஸ்ஸா கடற்கரையில் நீரில் மூழ்கிய இரு இந்தியர்கள் மீட்கப்பட்டனர்
மிரிஸ்ஸா கடற்கரையில் நீரில் மூழ்கிய இரு இந்தியர்கள் மீட்கப்பட்டனர்
கொட்டாவில பொலிஸ் பிரிவு எல்லைக்குட்பட்ட மிரிஸ்ஸா கடற்கரையில் கடலில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டினர், பலத்த கடல் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.
கொட்டாவில பொலிஸ் உயிர் காக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று (31) இருவரையும் மீட்டு, அவர்களுக்கு முதலுதவி அளித்தனர்.
பொலிஸ் தகவலின்படி, மீட்கப்பட்டவர்கள் 28 மற்றும் 29 வயதுடைய இந்தியர்கள் ஆவர்.
கொட்டாவில பொலிஸ் தரப்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.








