Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

ஒருத்தியின் கதறல் ….!

ஒருத்தியின் கதறல் ….!

மஞ்சள் தாலி தந்தவரே
மாயமான தென்ன …?
மஞ்சம் ஏறி கொஞ்சி தழுவி
மங்கை மறந்த தென்ன …?

உருகி விழியில் நீரும் வடிய
உருகி அணைத்தாய் என்னை – இன்று
உருகி கதற வைத்தேன் என்னை
உயிரே மறந்து சென்றாய் …?

பருகி முடித்து பாதியில் விட்டு
பாவை கதற சென்றாயே – இன்னல்
பார்த்தும் என்னை ஈர்த்து செல்ல
பாசமே உன்னை ஊந்தலையோ …?

ஒரு நாள் உன்னை மரணம் தீண்டும்
ஒரு நொடி என்னை உணர்வாய் – நீ
ஊற்றிய ஊழ்வினை உன்னை வதைக்க
உள்ள வலிகள் புரிவாய் …..

அதுவரை ஆடு ஆட்டம் போடு
ஆண்டவன் தண்டனை இடுவான் …
வேசி என்றே ஊரும் நகைக்க
வெந்து வெந்தே சாகிறேன் ….!

  • வன்னிமைந்தன் -(ஜெகன் )
    ஆக்கம் -01/12/2018
Home » ஒருத்தியின் கதறல்