Tag: இளைஞர் கைது
நுவரெலியாவில் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த இளைஞர் கைது
நுவரெலியாவில் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த இளைஞர் கைது
நுவரெலியாவில் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த இளைஞர் கைது
கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த 27 வயதுடைய நபர் ஒருவர் நுவரெலியா பஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று (12) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நவம்பர் 10ஆம் திகதி நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகஸ்தோட்டை பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்குள் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து, சந்தேகநபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் 27 வயதான திரப்பனை பகுதியைச் சேர்ந்தவர்.
நவம்பர் 10ஆம் திகதி திரப்பனை பொலிஸ் பிரிவில் காவலில் இருந்து தப்பிச் சென்றமை தொடர்பிலும் சந்தேகநபர் தேடப்பட்டு வந்தவர் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








