Tag: இன்று போல் என்றும்
இன்று போல் என்றும் வாழ்ந்திடு
Author: நிருபர் காவலன் Published Date: 26/08/2023
இன்று போல் என்றும் வாழ்ந்திடு
ஆசானாய் எனக்குள்ளே உறைந்தவன்
ஆழ நெஞ்சுக்குள் குடி கொண்டவன்
தொண்டுக்கு முதலாகி நிற்பவன்
தொழும் படி பணிகளை செய்பவன்
வெற்றிக்கு துணையாகி நின்றவன்
வேங்கைக்கு வேராகி முளைத்தவன்
அன்பிலே குறையாது நடப்பவன்
அன்றாடம் தொடர்பிலே இருப்பவன்
வர்க்கத்தை தெரிந்தே வகுப்பவன்
வழிமாறா பணிகளை சுமப்பவன்
சொர்க்கத்தில் இருப்பதாய் நினைக்கிறன் – இவன்
சொந்தத்தில் ஒருவனாய் இருப்பவன்
ஈழத்தின் பெயர் சூடி நடப்பவன்
ஈகத்தின் தன்மானம் கொண்டவன்
இன்று போல் என்றும் வாழ்ந்திடு
இவ்வையாம் ஆண்டே வென்றிடு ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 26-08-2023
- மீள வருவாயாby நிருபர் காவலன்
- ஒரு நாள் வெல்வேன்by நிருபர் காவலன்
- எப்படி நான் பேசிடுவேன்by நிருபர் காவலன்
- என்னை விடுby நிருபர் காவலன்
- நேரில் வந்து விடுby நிருபர் காவலன்
- என் உயிரே நான் வெல்வேன்by நிருபர் காவலன்
- என்னை ஏற்று விடுby நிருபர் காவலன்
- என்னை அழைப்பாயாby நிருபர் காவலன்
- அடைத்து வைக்க வாவேண்டிby நிருபர் காவலன்
- கவலைப் படுகிறேன்by நிருபர் காவலன்

















