Tag: வெடிபொருட்களுடன்
வெடிபொருட்களுடன் ஒருவர் கைது
வெடிபொருட்களுடன் ஒருவர் கைது
வெடிபொருட்களுடன் ஒருவர் கைது ரக்வானை, மெதகங்கொட பகுதியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை
உடவலவை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் இருந்து சுமார் 3 கிலோ கிராம் கோர்டைட், 9 கிலோ கிராமுக்கு மேற்பட்ட அம்மோனியா, 15 வோட்டர் ஜெல்
என்ற வெடி மருந்து, 28 டெட்டனேட்டர்கள் மற்றும் 22 அடி நீளமான நூல் ஆகியவை மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர்
கைது செய்யப்பட்ட நபர் ரக்வானை பகுதியை சேர்ந்த 78 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது
வெடிபொருட்களுடன் சந்தேகநபர் கைது
வெடிபொருட்களுடன் சந்தேகநபர் கைது
வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பூனேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூனேவ சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் குழு நேற்று (13) இரவு சோதனையிட்டுள்ளது.
கைதான சந்தேகநபரிடமிருந்து சேவை நூல், 150 கிராம் அம்மோனியம் மற்றும் 1 ஜெலக்னைட் குச்சிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மத்துகம பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது
வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது
வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவுல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (18) காலை நாவுல பிபில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, சந்தேகநபர்களிடம் 05 டெட்டனேட்டர்கள், 03 வோட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் வயர் ரோல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 38, 49, 50 மற்றும் 65 வயதுடைய கட்டுகஸ்தோட்டை, கம்பளை, எலஹெர மற்றும் உடலகவின்ன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவராவர்.
நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்















