Tag: ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகாவின் செயலால் வருத்தமடைந்த ரசிகர்கள்
ராஷ்மிகாவின் செயலால் வருத்தமடைந்த ரசிகர்கள்
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகாவின் செயலால் ரசிகர்கள் வருத்தம் அடைந்திருக்கிறார்கள்.
ராஷ்மிகாவின் செயலால் வருத்தமடைந்த ரசிகர்கள்
ராஷ்மிகா மந்தனா
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில்
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.
அதேநேரம் ராஷ்மிகாவுக்கு அழகு இருக்கிறது. ஆனால் நல்ல மனது இல்லை என்று ரசிகர்கள் எரிந்து விழும் அளவுக்கு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். இதற்கு காரணம்
உள்ளது. சமீபத்தில் ராஷ்மிகா மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வெளியே வந்தார். அப்போது ஒரு சிறுமி அவரிடம் எதாவது கொடுங்கள் என்று கேட்கிறாள். அந்த சிறுமியை ராஷ்மிகாவின் பாதுகாவலர்கள் தள்ளிவிட்டனர்.
ராஷ்மிகா மந்தனா
ஆனாலும் அந்த குழந்தை ராஷ்மிகாவை நோக்கி கையை நீட்டி பசிக்கிறது சாப்பிட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
ஆனால் ராஷ்மிகா அந்த குழந்தைக்கு எதுவும் கொடுக்காமல் சிரித்துக்கொண்டே சென்று காரில் உட்கார்ந்து விட்டார்.
இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி பலரும் ராஷ்மிகாவின் செயலை சாடி
வருகின்றனர். மேலும் பல ரசிகர்கள் அந்த குழந்தைக்கு எதாவது கொடுத்திருக்கிலாம் என்றும் பதிவு செய்து வருத்தமடைந்திருக்கிறார்கள்.
ராஷ்மிகாவின் ஆபாச காட்சிகளை நீக்கிய படக்குழு
ராஷ்மிகாவின் ஆபாச காட்சிகளை நீக்கிய படக்குழு
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் ராஷ்மிகா மந்தனாவின் ஆபாச காட்சிகளை படக்குழுவினர் நீக்கியுள்ளனர்.
ராஷ்மிகாவின் ஆபாச காட்சிகளை நீக்கிய படக்குழுவினர்
ராஷ்மிகா மந்தனா
தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது 2 இந்தி படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும்
நடித்து வருகிறார். அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா படம்
சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த படத்தில் எல்லை மீறிய சில ஆபாச காட்சிகள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. சாமி சாமி பாடலில் பாவாடையுடன் ராஷ்மிகா மந்தனா கவர்ச்சியாக நடனம் ஆடுவதும், அல்லு அர்ஜுனுடன்
காருக்குள் நெருக்கமாக அமர்ந்து காதல் செய்யும் காட்சியும், வசனமும் ஆபாசமாக இருப்பதாகவும், இந்த காட்சிகள் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைப்பதாகவும் எதிர்ப்புகள் கிளம்பின.
ராஷ்மிகா மந்தனா
புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா
இதனால் பலரும் குழந்தைகளுடன் குடும்பத்தோடு படம் பார்க்க வருவதை தவிர்ப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து சர்ச்சை காட்சிகளை படத்தில் இருந்து படக்குழுவினர் நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விவசாயம் செய்யும் ராஷ்மிகா மந்தனா
விவசாயம் செய்யும் ராஷ்மிகா மந்தனா
.
கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படம் மூலம்
ரசிகர்களை கவர்ந்த அவர், குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.
இவர் தமிழில் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் நடித்துள்ளார். பாக்யராஜ் கண்ணன் இயக்கி
இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், ராஷ்மிகா
மந்தனா விவசாயம் செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.







