Tag: ராதிகா ஆப்தே
நிர்வாணமாகவோ காட்டவோ மட்டுமே நான் – ராதிகா ஆப்தே
நிர்வாணமாகவோ காட்டவோ மட்டுமே நான் – ராதிகா ஆப்தே
பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கவர்ச்சியாக நடிப்பது குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார்.
நிர்வாணமாகவோ கவர்ச்சியை காட்டவோ மட்டுமே நான் சினிமாவிற்கு வரவில்லை – ராதிகா ஆப்தே
ராதிகா ஆப்தே
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பிரபலமான ராதிகா ஆப்தே தெலுங்கு,
இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். ஒரு படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை
ஏற்படுத்தினார். தற்போது ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில், ”சமீபத்தில் ஒரு இயக்குனர்
என்னை சந்தித்து அவரது படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். ஏன் இதே போன்ற கதைகளுடன் வருகிறீர்கள் என கேட்டேன்.
நீங்கள் பட்லாபூர், அகல்யா போன்ற படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்தது மட்டுமின்றி
ஏற்கனவே நிர்வாணமாக ஒரு படத்தில் நடித்து இருக்கிறீர்கள் அல்லவா என கேட்டார்.
எனவே இப்படத்தில் அதே போன்ற கதாபாத்திரம் செய்வீர்களோ என்ற எண்ணத்தில் உங்களை அணுகினேன் என தெரிவித்தார். அதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.
ராதிகா ஆப்தே
இந்திய சினிமாவில் மட்டுமல்ல வெளிநாட்டு படங்களிலும் நிர்வாணமாக நடிப்பது ஒன்றும்
தவறல்ல. கதைக்கு தேவை என்றால் அப்படி நடிக்கலாம். நிர்வாணமாக நடிக்க வைப்பதற்காகவே
கண்டபடி கதைகளை கொண்டு வந்தால் எப்படி?. நிர்வாணமாகவோ கவர்ச்சியை காட்டவோ
மட்டுமே நான் சினிமாவிற்கு வரவில்லை. கதை பிடித்திருந்தால் எவ்வளவு தூரம்
வேண்டுமானாலும் செல்வேன். கதையே இல்லாமல் உடம்பை காட்டவோ நிர்வாணமாக நடிக்கவோ மாட்டேன்” என்றார்.
விசா பெறுவதற்காக தான் திருமணம் செய்தேன்- ராதிகா ஆப்தே
விசா பெறுவதற்காக தான் திருமணம் செய்தேன்- ராதிகா ஆப்தே
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே, தனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளார்.
விசா பெறுவதற்காக தான் திருமணம் செய்தேன்- ராதிகா ஆப்தே
ராதிகா ஆப்தே
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில், ‘‘நான் 8 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த பெனட்டிக் டைலர் என்ற இசைக்கலைஞரை திருமணம் செய்து கொண்டேன்.
ஆனாலும் எனக்கு திருமண முறைகள் மீது நம்பிக்கையே இல்லை. அப்படியென்றால் எதற்காக நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள் என்று என்னை கேட்கலாம்.
ராதிகா ஆப்தே
நான் விசா வாங்குவதற்காக மட்டும்தான் திருமணம் செய்து கொண்டேன். இங்கிலாந்து இளைஞரை மணந்தாலும் இப்போது நான் இந்தியாவில்தான் இருக்கிறேன். அவ்வப்போது
இங்கிலாந்துக்கு சென்று எனது கணவரை சந்தித்துவிட்டு வருகிறேன். சினிமாவில் நடிப்பதற்காக எனது கணவரை பிரிந்து நான் தனியாக இருக்கிறேன் என்று தகவல்கள் பரவுகிறது.
அதில் உண்மை இல்லை. வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தால் விரைவாகவும், எளிதாகவும் விசா கிடைக்கும் என்றனர். அதற்காகத்தான அவரை மணந்தேன்.
அதன்பிறகு எனது வேலையை நான் செய்து கொண்டு இருக்கிறேன். அவசியம் ஏற்படும்போது கணவரை சந்திக்க செல்கிறேன்” என்றார்.
நிர்வாண வீடியோ வெளியானதும் வெளியே தலைகாட்ட முடியவில்லை – ராதிகா ஆப்தே.
நிர்வாண வீடியோ வெளியானதும் வெளியே தலைகாட்ட முடியவில்லை – ராதிகா ஆப்தே.
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி மற்றும் வெற்றிச்செல்வன், தோனி படங்களில் நடித்துள்ள ராதிகா
ஆப்தே இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார். பார்ச்சட் என்ற இந்தி படத்தில் பாலியல் தொழிலாளியாக வந்தார்.
ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமா வாழ்க்கையில்
ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து ராதிகா ஆப்தே தற்போது அளித்துள்ள பேட்டியில்
கூறும்போது, “நிர்வாண வீடியோ வெளியானதும் நான்கு நாட்கள் வெளியே தலைகாட்ட
முடியவில்லை. எனது கார் டிரைவர், வீட்டு வேலை செய்பவர்கள், உறவினர்கள் யாரேனும் அந்த வீடியோவை பார்த்து இருப்பார்களோ என்ற அச்சத்தினால் மனம் புழுங்கி இருந்தேன்.
அந்த வீடியோவை வைத்து சமூக வலைத்தளத்தில் என்னை கேவலமாக அவதூறும், கேலியும் செய்ததை தாங்க முடியவில்லை. அதையெல்லாம் கடந்து தொடர்ந்து நடித்து வருகிறேன்.
ராதிகா ஆப்தே
ராம்கோபால் வர்மா இயக்கிய ரத்த சரித்திரா படத்தில் ஏமாற்றப்பட்டேன். எதிர்பார்த்த சம்பளம் தரவில்லை.
படப்பிடிப்பை திட்டமிட்ட நேரத்தில் தொடங்காமல் எனது நேரத்தையும், திறமையையும் விரயமாக்கினர்.
சினிமா என்றால் இப்படித்தான் இருக்குமா என்றெல்லாம் யோசித்தேன்.
அதில் ஏற்பட்ட அனுபவம் நான் ஒதுக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதில் என்னை உறுதியாக இருக்க வைத்தது’’ என்றார்.
வாழ்க்கையை நினைத்தால் சோகமும் பயமும் வருகிறது – ராதிகா ஆப்தே
வாழ்க்கையை நினைத்தால் சோகமும் பயமும் வருகிறது – ராதிகா ஆப்தே
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே, வாழ்க்கை எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைத்தால் சோகமும் பயமும் உருவாகிறது என்று கூறியுள்ளார்.
வாழ்க்கையை நினைத்தால் சோகமும் பயமும் வருகிறது – ராதிகா ஆப்தே
ராதிகா ஆப்தே
ராதிகா ஆப்தே நடிப்பில் ‘தாண்டவ்’ என்ற வெப் சீரிஸ் கடந்த ஜனவரி மாதம் ஒடிடி தளத்தில் வெளியானது. இந்துக் கடவுள்களை தவறாக சித்தரித்து ஒளிபரப்பான இந்த தொடரை தடை செய்யவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த விவகாரம் பெரிதாக வெடித்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வெப் சீரிசை உடனடியாக நீக்க வலியுறுத்தி நடிகை
கங்கணா உள்ளிட்ட பல பிரபலங்கள் போர்கொடி உயர்த்தினர். இதை பார்த்த மத்திய அரசு, ஓடிடி தளங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் சட்ட விதிமுறைகளை வகுத்தது.
ராதிகா ஆப்தே
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளதாவது, ’ஒரு விஷயத்திற்கு எதிராக மாற்று கருத்து உருவாகும்போது சுதந்திரத்துக்கும், சகிப்புத் தன்மைக்கும் இடம் கொடுக்க வேண்டும்.
நமது வாழ்க்கை எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைத்தால் சோகமும் பயமும் உருவாகிறது. ஓடிடி தளங்களால்
ஏராளமான வாய்ப்புகள் இருந்தாலும் கூட ஐந்து ஆண்டுகள் பொருத்திருந்து பார்த்தால் அனைத்திற்கும் விடை கிடைக்கும்.’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






