Tag: மண்சரிவு
மண்சரிவு அபாயம் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மண்சரிவு அபாயம் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
இலங்கையில் ஏற்பட்டுளள சீரற்ற காலநிலை காரணமாக மலை பகுதி வழியாக செல்லும் மக்களிற்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
பதுளை பிரதான வீதி, நுவரெலியா சாலைகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது , ஆதலால்
இவ் வழியாக பயணப்படுபவர்களை மிக விழிப்பாக செல்லும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
பாறைகள் உருண்டு வீதிகளில் விழலாம் என எதிர் பார்க்க படுகிறது ,மக்களே யாக்கிரதை
மண்சரிவு அபாயம் – 33 பேர் இடம்பெயர்வு
மண்சரிவு அபாயம் – 33 பேர் இடம்பெயர்வு
நுவரெலியா மாவட்ட நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் பெய்து வரும் மழையினால் கந்தபளை தோட்டம்
கொன்கோடியா மத்திய பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக 7 குடும்பங்களை சேர்ந்த 33 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
குறித்த 33 பேர் வெளியேற்றப்பட்டு, கொன்கோடியா தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான உலர் உணவு பொருட்கள் நுவரெலியா பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.
அதேபோன்று, இந்த பகுதி மக்கள் கடந்த 10 வருட காலங்களாக மண்சரிவு அபாயத்திற்கு உள்ளாக்கியிருந்த போதிலும், மழை
காலங்களில் மாத்திரம் முகாம்களுக்கு செல்வதும், பின்பு காலநிலை வழமைக்கு திரும்பிய பின் வீடுகளுக்கு செல்வதுமாகவே வழமையாக கொண்டு வந்துள்ளனர்.
எனவே பாதிக்கப்பட்ட தங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பாதிக்கப்பட்ட இவர்கள் சம்மந்தப்பட்ட
அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
திடீர் மண்சரிவு – போக்குவரத்து தடையால் மக்கள் அவதி
திடீர் மண்சரிவு – போக்குவரத்து தடையால் மக்கள் அவதி
இலங்கை – பதுளை பிரதான வீதியில் திடீரென ஏற்பட்ட மண் சரிவால் அந்த வழி போக்குவரத்து தடை பட்டுள்ளது ,சீரற்ற கால நிலை காரணமாக மலை பகுதியில் இருந்து ஏற்பட்ட மண்சரிவால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது .
மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்னம் உள்ளது






