Tag: போலீசார் குவிப்பு
Posted in இலங்கை செய்திகள்
பாரிய வெடிப்பு சம்பவம் – வீடுகள் சேதம்
Author: நலன் விரும்பி Published Date: 02/06/2022 Leave a Comment on பாரிய வெடிப்பு சம்பவம் – வீடுகள் சேதம்
பாரிய வெடிப்பு சம்பவம் – வீடுகள் சேதம்
எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஹதென்ன, கஜு கஸ்வத்த பிரதேசத்தில்
வீடொன்றின் பின்புறம் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று (02) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் சிக்கி அருகில் உள்ள பல வீடுகள் சேதமடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
வெடிகுண்டு ஒன்றே இவ்வாறு வெடித்ததாகவும், சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும்
எல்பிட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் .






