பூஜா ஹெக்டே
Posted in சினிமா

வைரலாகும் பீஸ்ட் நடிகையின் உடற்பயிற்சி

வைரலாகும் பீஸ்ட் நடிகையின் உடற்பயிற்சி

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டேவின் வீடியோ வைரலாகி வருகிறது.

வைரலாகும் பீஸ்ட் நடிகையின் உடற்பயிற்சி வீடியோ
பூஜா ஹெக்டே


நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். பூஜா ஹெக்டே தமிழில் 2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில்

நடிப்பில் வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபலமானார்.

தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி

வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பூஜா ஹெக்டே தனது சமூக

வலைத்தள பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது

    Posted in சினிமா

    திருமணம் குறித்து மனம்திறந்த பட நாயகி

    திருமணம் குறித்து மனம்திறந்த பட நாயகி

    கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பிசியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, சமீபத்திய பேட்டியில் திருமணம் குறித்து பேசியுள்ளார்.

    திருமணம் குறித்து மனம்திறந்த ‘பீஸ்ட்’ பட நாயகி
    பூஜா ஹெக்டே


    தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்

    பூஜா ஹெக்டே. அந்த படத்துக்கு பின்னர் டோலிவுட்டுக்கு சென்ற அவர் அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

    தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படம் மூலம் கோலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள பூஜா ஹெக்டே, அப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்

    இதுதவிர தெலுங்கு, இந்தி படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

    இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே, சமீபத்திய பேட்டியில் திருமணம் குறித்து பேசி உள்ளார்.

    அப்போது அவர் கூறியதாவது: “திருமண வயது வந்துவிட்டது என்பதற்காகவோ அல்லது திருமணம்

    செய்து கொள்ள இதுதான் சரியான நேரம் என்பதற்காகவோ திருமணம் செய்து கொள்வது கண்டிப்பாக சரியல்ல.

    வாழ்க்கை எல்லாம் சேர்ந்து இருக்க முடியும் என ஒரு மனிதரோடு இருக்கும்போது தோன்றினால்

    அப்போது அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவர்தான் வாழ்க்கைக்கு நல்ல கணவராக இருப்பார்” என்றார்.

      Posted in சினிமா

      பீஸ்ட் நடிகைக்கு பிரபாஸ் படக்குழுவினர் கொடுத்த சிறப்பு பரிசு

      பீஸ்ட் நடிகைக்கு பிரபாஸ் படக்குழுவினர் கொடுத்த சிறப்பு பரிசு

      பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் பூஜா ஹெக்டேவிற்கு பிரபாஸ் படக்குழுவினர் சிறப்பு பரிசு ஒன்றை கொடுத்து இருக்கிறார்கள்.

      பீஸ்ட் நடிகைக்கு பிரபாஸ் படக்குழுவினர் கொடுத்த சிறப்பு பரிசு
      பூஜா ஹெக்டே


      தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு

      விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பூஜே ஹெக்டே தெலுங்கில் பிரபாசுடன் இணைந்து ‘ராதே ஷ்யாம்’ என்னும் படத்தில் நடித்துள்ளார்.

      பூஜா ஹெக்டே

      350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ராதா கிருஷ்ணகுமார்

      இயக்கி இருக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இன்று இப்படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

      இவருக்கு ‘ராதே ஷ்யாம்’ படக்குழுவினர் சிறப்பு பரிசு கொடுக்கும் விதமாக புதிய போஸ்டர் ஒன்றை உருவாக்கி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

        Posted in சினிமா

        தடுப்பூசி போட்டுக் கொண்ட விஜய் பட நடிகை

        தடுப்பூசி போட்டுக் கொண்ட விஜய் பட நடிகை

        தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து தற்போது தமிழில் விஜய்யுடன் நடித்து வரும் நடிகை கொரோனா தடுப்பூசி போட்டு இருக்கிறார்.

        கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விஜய் பட நடிகை
        பூஜா ஹெக்ட

        Ethiri.com – எதிரி இணையம்


        தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி

        நடிகையானார். தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

        இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே கொரோனா முதல் தடுப்பூசி போட்டு இருப்பதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்திருக்கிறார்.

        பூஜா ஹெக்டே
        பூஜா ஹெக்டே

        கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடிகை பூஜா ஹெக்டே, கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதன்பின் சிகிச்சைக்குப் பிறகு தொற்றில் இருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

          Posted in சினிமா

          விஜய்யுடன் நடனம் ஆட சிறப்பு பயிற்சி பெறும் பூஜா ஹெக்டே

          விஜய்யுடன் நடனம் ஆட சிறப்பு பயிற்சி பெறும் பூஜா ஹெக்டே

          சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திற்காக நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார்.

          விஜய்யுடன் நடனம் ஆட சிறப்பு பயிற்சி பெறும் பூஜா ஹெக்டே
          பூஜா ஹெக்டே


          விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பீஸ்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.

          இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருவதால் ஜூலை மாதம் முதல் ஷூட்டிங்கைத் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

          பூஜா ஹெக்டே
          பயிற்சி பெறும் பூஜா ஹெக்டே

          இப்படத்திற்காக சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் செட் அமைக்கும் வேலைகள் நடந்து முடிந்துள்ளன. இங்கு பாடல் காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். இந்நிலையில் விஜய்யுடன்

          நடனம் ஆடுவதற்காக நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பயிற்சி எடுத்து வருவதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்

            Posted in சினிமா

            நயன்தாராவுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய பூஜா

            நயன்தாராவுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய பூஜா

            தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே. அந்த படத்துக்கு அவர் ரூ.30 லட்சம் சம்பளம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

            தற்போது தென்னிந்திய மொழிகளில், நடிகை பூஜா ஹெக்டேவுக்கு மார்க்கெட் உயர்ந்துள்ளது. இதுவரை அவர் தெலுங்கு, இந்தியில் நடித்த படங்கள் நல்ல வசூல் ஈட்டி உள்ளன.

            சமீபத்தில் அல்லு அர்ஜுடன் நடித்த தெலுங்கு படமும் மாபெரும் வெற்றி பெற்றது. எனவே சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி இருக்கிறாராம் பூஜா ஹெக்டே.

            பூஜா ஹெக்டே, நயன்தாரா

            இது நயன்தாரா வாங்கும் சம்பளத்துக்கு இணையானது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கில் மகேஷ்பாவுடன் நடித்தபோது ரூ.2 கோடி சம்பளம் வாங்கினாராம்.

            தற்போது இந்தியில் 2 படங்கள், தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘தளபதி 65’ படம், தெலுங்கில் 2

            படங்கள் என்று 5 படங்களில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. அவர் நடித்த எல்லா படங்களும் வெற்றி பெறுவதால் சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.